உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி - தாய் சண்டை காபி விவசாயி தற்கொலை

மனைவி - தாய் சண்டை காபி விவசாயி தற்கொலை

ஹாசன்: குடும்ப பிரச்னையால், இளைஞர் துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.ஹாசன் சக்லேஸ்புராவின் பாச்சிஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் கருணாகர், 40. இவர் தன் தோட்டத்தில், காபி விவசாயம் செய்கிறார். இவருக்கு திருமணமாகி, மனைவி உள்ளார்.இவரது மனைவிக்கும், தாய்க்கும் ஒத்து போகவில்லை. தினமும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, மாமியாரும், மருமகளும் சண்டை போட்டு கொண்டனர். கருணாகர் பலமுறை புத்திமதி கூறியும் பலனில்லை. இவர்களின் சண்டையால் வீட்டில் நிம்மதி, அமைதி குலைந்தது. நேற்று முன்தினம் இரவும், வழக்கம் போன்று இவரது தாயும், மனைவியும் சண்டை போட்டனர்.இதை பார்த்து மனம் வருந்திய கருணாகர், நேற்று காலை தன் வீட்டில் துப்பாக்கியால் தன் தலையில் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார். எசலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி