உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடவுள் ராமர் குறித்து கம்யூ., - எம்.எல்.ஏ., சர்ச்சை

கடவுள் ராமர் குறித்து கம்யூ., - எம்.எல்.ஏ., சர்ச்சை

திருச்சூர், கடவுள் ராமர் குறித்து, கேரளாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., பாலச்சந்திரன் தெரிவித்த கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருச்சூர் சட்டசபை தொகுதி இ. கம்யூ., - எம்.எல்.ஏ., ஆக இருப்பவர் பாலச்சந்திரன். இவர் ஹிந்து தெய்வங்கள் குறித்து முகநுாலில் அவதுாறாக பதிவிட்டுஇருந்தார். 'கடவுள் ராமர் மற்றும் லட்சுமணனுக்கு, சீதை பரோட்டா மற்றும் இறைச்சியை உணவாக பரிமாறியதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது' என, அவர் பதிவிட்டிருந்தார். அவரது இந்த கருத்துக்கு, ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பாலச்சந்திரன் முகநுாலில் அந்த சர்ச்சைக்குரிய பதிவை நீக்கினார். இந்நிலையில், அவர் கூறியதாவது: பழைய கதை ஒன்றை முகநுாலில் பதிவிட்டிருந்தேன். யாரையும் புண்படுத்தும் நோக்கில் அது பதிவிடப்படவில்லை. ராமர் பக்தர்களை அந்த பதிவு புண்படுத்தியிருப்பதை அறிந்து வருந்துகிறேன். இதற்காக மன்னிப்பு கேட்கிறேன். சர்ச்சை ஏற்பட்டதால், அந்த பதிவை அடுத்த சில நிமிடங்களிலேயே அகற்றி விட்டேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை