உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி.டி.தேவகவுடா மீது லோக் ஆயுக்தாவில் புகார்

ஜி.டி.தேவகவுடா மீது லோக் ஆயுக்தாவில் புகார்

மைசூரு:

மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா, மைசூரு லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷை நேற்று சந்தித்துப் பேசினார். 'முடா'வில் சட்டவிரோதமாக வீட்டுமனைகள் வாங்கியதாக மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதி ம.ஜ.த., - -எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா மீது புகார் கொடுத்தார்.

பின், சிநேகமயி கிருஷ்ணா அளித்த பேட்டி:மைசூரு அருகே தேவனுாரில் உள்ள அரசு நிலத்தை சவுடய்யா என்பவர் ஆக்கிரமித்தார். அந்த நிலத்தை, 'முடா' கையகப்படுத்தியதாக கூறி, 50க்கு 50 திட்டத்தின் கீழ் ஆறு வீட்டுமனைகளை அவர் வாங்கினார். இதற்கு சாமுண்டீஸ்வரி தொகுதி ம.ஜ.த., -- எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா உடந்தையாக இருந்துள்ளார்.ஆறு வீட்டுமனைகளில் இரண்டு வீட்டுமனைகளை ஜி.டி.,தேவகவுடாவுக்கு, சவுடய்யா கொடுத்துள்ளார். வீட்டுமனைகளை மகள், மருமகன் பெயருக்கு ஜி.டி.,தேவகவுடா எழுதி கொடுத்து இருக்கிறார். இந்த முறைகேட்டில் 'முடா' அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் லோக் ஆயுக்தாவில் புகார் செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து ஜி.டி.தேவகவுடா கூறுகையில், ''சிநேகமயி கிருஷ்ணா நன்றாக பணியாற்றி வருகிறார். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று போராடுகிறார். அதில் தவறு இல்லை. ஆனால் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். விசாரணையில் உண்மை தெரிய வரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ