உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதரீதியில் வாக்கு கேட்டதாக புகார்: பா.ஜ., வேட்பாளர் மீது எப்.ஐ.ஆர்.,

மதரீதியில் வாக்கு கேட்டதாக புகார்: பா.ஜ., வேட்பாளர் மீது எப்.ஐ.ஆர்.,

பெங்களூரு: கர்நாடகாவில் மதரீதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் பா.ஜ., வேட்பாளர் தேஜாஸ்வி சூர்யா மீது போலீசார் எப்.ஐ.ஆர்.,பதிவு செய்துள்ளனர்.ஏழு கட்டங்களாக நடக்க உள்ள பார்லிமென்ட் லோக்சபாவிற்கு ஏப். 19-ல் முதற்கட்ட தேர்தல் நடந்தது. நேற்று இரண்டாம் கட்டமாக கர்நாடகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளராக தேஜஸ்வி சூர்யா போட்டியிடுகிறார்.முன்னதாக தேஜாஸ்வி சூர்யா பிரசார வீடியோ ‛ எக்ஸ்' தளத்தில் வெளியிட்டார். அதில் பெங்களூரு தெற்கு தொகுதியில் 80சதவீத பா.ஜ.வினர், 20சதவீத காங்கிரஸ் கட்சியினர் உள்ளதாக கூறினார். இவரது பிரசாரம் மதரீதியாக இருந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து தேஜஸ்வி சூர்யா மீது ஜெய்நகர் காவல் நிலைய போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
ஏப் 27, 2024 15:57

சரி சரி விடுங்கள், அவரவருக்குத் தெரிந்தது போல் தானே அவரவர் பிரசாரம் செய்வார்கள்! பாஜகவினருக்கு வேறு என்ன அரசியல் செய்யத் தெரியும்?


Venkatasubramanian krishnamurthy
ஏப் 27, 2024 11:26

ஒரு எஃப்ஐஆர் என்பது காங்கிரஸ் அந்ததீ தொகுதியின் தோல்வியை ஒப்புக்கொண்டு தேர்தலுக்குப் பிறகான நயவஞ்சக நாடகத்திற்கான ஒத்திகை என்றே கருத வேண்டியுள்ளது


எஸ் எஸ்
ஏப் 27, 2024 11:00

குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஓட்டு போட சொல்லி அறிவுரை வழங்குவது அரசியல் ரீதியா அல்லது மத ரீதியா ஆபீஸர்?


ஆரூர் ரங்
ஏப் 27, 2024 10:49

இன்றும் எல்லா நாகாலாந்து அரசு விழாக்களிலும்( சட்டசபைக் கூட்டங்களின் துவக்கத்தில் கூட) முதலில் துவங்குகின்றன. உபயம் முன்னாள் காங்கிரஸ் அரசுகள்.


ஆரூர் ரங்
ஏப் 27, 2024 10:45

முன்பொருமுறை காங்கிரஸ் மிஸோரம் சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் பைபிள் வழியில் ஆட்சி செய்வோம் என வாக்குறுதியளித்திருந்தார்கள். அப்போது தேர்தல் ஆணையம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழே செயல்பட்டுக் கொண்டிருந்ததால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.


பேசும் தமிழன்
ஏப் 27, 2024 10:13

மத ரீதியில் வாக்கு கேட்பது... கான் கிராஸ் கட்சி மற்றும் இண்டியா கூட்டணி ஆட்கள் தான் ....நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Kasimani Baskaran
ஏப் 27, 2024 06:27

பாதிரியாரோ அல்லது இமாமோ தீம்காவுக்கும் காங்கிரசுக்கும் ஓட்டுப்போடச்சொல்வது மட்டும் ஜனநாயகமா? ஓட்டை விலை கொடுத்து வாங்குவது கூட கண்டு கொள்ளப்படுவது இல்லை இந்துக்கள் ஒன்றுபட்டு தேசவிரோத சக்திகளை ஒழித்துக்கட்ட வேண்டும்


N Sasikumar Yadhav
ஏப் 27, 2024 06:26

சிறுபான்மையிரனரின் ஓட்டுப்பிச்சைக்காக மதரீதியான சலுகைகளை கான்கிராஸ் கட்சி கொடுக்கும்போது இதுபோன்ற கேள்விகள் எழுப்ப படுவதில்லை


சூரியா
ஏப் 27, 2024 05:46

ஜமாத்திலும், சர்ச்களிலும் செய்வதென்ன விஞ்ஞானரீதியான பிரச்சாரமா?


Sathyan
ஏப் 27, 2024 05:40

இது உண்மையானால், முஸ்லீம் காட்சிகள் மற்றும் கிறித்துவ காட்சிகள் எந்த அடிப்படையில் மேடைகளில், மசூதி மற்றும் சர்ச்களில் வாக்கு கேட்கிறார்கள் அறிவு கெட்ட தனமான , ஒரு தலை பட்சமான எப்ஐஆர்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ