உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்டப்படிப்பை நினைத்த நேரத்தில் முடிச்சுக்கோங்க; மாணவர்களுக்கு நல்ல செய்தி சொல்கிறார் யு.ஜி.சி., தலைவர்

பட்டப்படிப்பை நினைத்த நேரத்தில் முடிச்சுக்கோங்க; மாணவர்களுக்கு நல்ல செய்தி சொல்கிறார் யு.ஜி.சி., தலைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: “மாணவர்கள் விரும்பினால் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியோ அல்லது கூடுதல் காலங்கள் எடுத்து கொண்டு, படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும்” என யு.சி.ஜி., தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.பல்கலைக்கழக மானியக் குழு கூட்டம் நவம்பர் 13ம் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில், பட்டப்படிப்பு முடிக்கும் காலம் குறித்து முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து யு.சி.ஜி., தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது: மாணவர்கள் தங்கள் கற்றல் திறன்களின் அடிப்படையில் தங்கள் படிப்பு காலத்தை குறைக்க அல்லது நீட்டிக்க முடிவு செய்யலாம். மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்க கூடுதல் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யு.ஜி.சி., கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

கூடுதல் அவகாசம்!

மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம். தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது. உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் கற்றல் திறன்களை மதிப்பிடுவதற்கு குழுக்களை அமைக்கும். மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனையும், சுயதொழில் ஆர்வத்தையும் மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு திறன்சார்ந்த கல்வி அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 29, 2024 20:59

நல்ல முடிவு ....


ஆரூர் ரங்
நவ 29, 2024 11:21

இது போல் தேர்வெழுத வயதுக் கட்டுப்பாட்டையும் நீக்க வேண்டும். ததாகத் அவதார் துளசி எனும் பிஹார் மாணவர் 12 வயதில் MSc பட்டமும் 21 வயதில் பெங்களூரு பிரபல IISC மூலம் டாக்டரேட் பட்டமும் பெற்றார். இவ்வசதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.


MARI KUMAR
நவ 29, 2024 10:53

நல்ல முடிவு தான் வரவேற்கிறேன், கஷ்ட காலத்தில் இருக்கும் குழந்தைகள் பார்ட் டைம் ஆக வேலை செய்து கொண்டு படிப்பதற்கு உதவி செய்யுமாறு இருக்கும்