உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிரா பா.ஜ., கூட்டணியில் குழப்பம்

மஹாராஷ்டிரா பா.ஜ., கூட்டணியில் குழப்பம்

மஹாராஷ்டிராவில் பா.ஜ., தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது; பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும், துணை முதல்வராக உள்ளனர்.சட்டசபை தேர்தலில் காங்., கூட்டணியை முற்றிலுமாக ஒழித்துக் கட்டியது, பா.ஜ., கூட்டணி. ஆட்சிக்கு எந்த பிரச்னையும் இருக்காது என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது தினமும் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கி தவிக்கிறது, பா.ஜ., கூட்டணி.பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமன்றி, கூட்டணி எம்.எல்.ஏ.,க்களும் பல விஷயங்களில் அரசை விமர்சிக்கின்றனர். இந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு பசையுள்ள பதவிகள் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில், தங்கள் இஷ்டப்படி மீடியாவில் பேச ஆரம்பித்துவிட்டனர். உடனே, இதை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, முதல்வர் பட்னவிஸை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டன.நிலைமை மோசமாவதை உணர்ந்து கொண்ட முதல்வர், சமீபத்தில் பா.ஜ., மற்றும் கூட்டணி எம்.எல்.ஏ.,க்களின் கூட்டத்தை தன் வீட்டில் கூட்டி, 'இனிமேல் நம் அரசு குறித்து, உங்கள் கருத்துக்களை வெளியே பேசாதீர்கள்.நீங்கள் பேசுவதை, எதிர்க்கட்சிகள் பெரிதாக்கி, பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. உங்களுடைய ஆதங்கத்தை எங்களிடம் சொல்லுங்கள்; எதற்காக மீடியாவிற்கு செல்கிறீர்கள்?' என, பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.இந்த கூட்டத்தில் துணை முதல்வர்களும் பங்கேற்றனராம். எப்போதுமே பேசுகிற அரசியல்வாதிகள் வாய் சும்மா இருக்குமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஜூலை 06, 2025 13:36

கொடூரமான பசியில் இருக்கும் காங்கிரஸ் ஆண்டால் கட்டுப்படுத்த முடியாத கொள்ளை அரங்கேறும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதனால்தான் அப்படி ஒரு வியூகம் அமைத்து செயல்படுத்தியது பாஜக. இதே வியூகம் தமிழகத்திலும் அரங்கேறவேண்டும். தீம்க்கா ஆண்டால் சிறுபான்மையினர் கூட விசை அண்ணாவை முன்னிறுத்துவார்கள்.


அப்பாவி
ஜூலை 06, 2025 13:04

பசையுள்ள பதவிக்கு பதில் கட்டிங்ஸை ஒழுங்கா குடுத்துட்டா நாங்க ஏன் விமர்சிக்கப் போறோம். ஊழலில்லாத ஃபட்னாவிஸ் அரசுன்னு புகழ்ந்து தள்ளிற மாட்டோமா


venugopal s
ஜூலை 06, 2025 11:56

விருப்பம் இல்லாமல் கட்டாயக் கல்யாணம் செய்து வைத்து விட்டு எத்தனை நாட்கள் தான் ஒற்றுமையாக இருப்பது போல் நடிக்க முடியும்!


Mario
ஜூலை 06, 2025 08:09

தன் வினை தன்னை சுடும்


கலைஞர்
ஜூலை 06, 2025 06:59

காங்கிரஸ் கட்சி ஒழிய வேண்டும்..அழிய வேண்டும்... காங்கிரஸ் கட்சி தேச விரோத கட்சி


Priyan Vadanad
ஜூலை 06, 2025 05:47

நல்ல செய்தி. இதுபோல பாஜக ஆளும் எல்லா மாநிலங்களிடமிருந்தும் இப்படிப்பட்ட நல்ல செய்தி வரவேண்டும்.


velan ஐயர், Sydney
ஜூலை 06, 2025 08:01

ப்ரியன் அதெல்லாம் ஒண்ணும் முடியாது. அப்டியே ஆனாலும் ஷிண்டேக்கள் உருவாக்க படுவார்கள். நீயும் 200 க்கு மாரடிக்க வேண்டியது தானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை