UPDATED : ஏப் 30, 2024 08:41 PM | ADDED : ஏப் 30, 2024 08:37 PM
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் புதிய காங்., வேட்பாளர் பட்டியலை கட்சி மேலிடம் இன்று (30.04.2024) வெளியிட்டுள்ளது. இதில் அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை.நாடு முழுதும் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xp6c236s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (30.04.2024) புதிய வேட்பாளர்கள் பட்டியலை காங்., மேலிடம் வெளியிட்டு உள்ளது. இதில் ராஜ்பாப்பர், ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு யார் காங்., வேட்பாளர்கள் குறித்து சஸ்பென்ஸ் நீடிக்கிறது.முன்னதாக 'அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு எடுப்பார்' என, காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி கூறியுள்ளது.