உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்திய காங்.,: பிரதமர் மோடி சாடல்

நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்திய காங்.,: பிரதமர் மோடி சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜமுய்: ‛‛மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்தியது'' என பிரதமர் மோடி கூறியுள்ளார். பீஹாரின் ஜமுய் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது: இங்கு கூடியிருப்பவர்களை பார்க்கும் போது மக்களின் உணர்வுகளை தெரிந்து கொள்ள முடிகிறது. பா.ஜ.,வுக்கும், தே.ஜ.,வுக்கும் ஆதரவாக ஒலிக்கும் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. ஒட்டு மொத்த நாட்டிற்கும் பீஹார் வழிகாட்டியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக சுதந்திரத்திற்கு பிறகு 5 - 6 தலைமுறையாக மாநிலத்திற்கு நீதி வழங்கப்படவில்லை.காங்கிரசும், ஆர்ஜேடி.,யும் ஆட்சி செய்த போது உலகளவில் நாட்டின் பெயரை கெடுத்தன. வளர்ந்த இந்தியாவை உருவாக்கவும், வளர்ச்சி பெற்ற பீஹாரை கட்டமைப்பதே பா.ஜ., தே.ஜ.,வின் நோக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைப் பற்றி உலக மக்கள் என்ன நினைத்தனர்? காங்கிரஸ் ஆட்சியில், ஏழை மற்றும் பலவீனமான நாடாக இந்தியா பார்க்கப்பட்டது. ஆனால், இன்று உலகத்திற்கே இந்தியா வழிகாட்டுகிறது. நம்மை உலகம் கவனிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கனோஜ் ஆங்ரே
ஏப் 04, 2024 17:17

, இந்திராகாந்தி, காங்கிரசுன்னு ஆரம்பிச்சுடுங்க? நீங்க பத்து வருஷமா என்னத்த செஞ்சீங்கன்னு கேட்டா உடனே “காங்கிரஸ், நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி”ன்னு ரீல் சுத்த ஆரம்பிச்சுடுவானுங்க கறுப்பு பணத்தை நூறு நாளில் ஒழிச்சிடுவேன்னு ல வடை சுட்டீங்க, இன்னுமா வடை வேகல? அமலாக்கத்துறை எங்க நுழைஞ்சாலும் கட்டு கட்டா கறுப்பு பணத்தை புடிக்குது எங்கேயா கறுப்பு பணத்தை ஒழிச்சீங்க?


Velan Iyengaar
ஏப் 04, 2024 15:50

தேர்தல் பத்திரம் கொண்டுவந்து அதிவிஞ்ஞான ஊழல் செய்து ஸ்டேட் வங்கியின் பெயரை கூட உலக அளவில் கெடுத்தது எல்லாம் நாட்டுக்கு புகழ் சேர்க்கும் செயலா ?


முருகன்
ஏப் 04, 2024 15:38

உங்கள் பத்து வருட ஆட்சியிலும் அவப் பெயர் தொடருகிறது என ஒத்து கொண்டதற்கு நன்றி


Indian
ஏப் 04, 2024 15:21

இன்னும் இருபது வருடம் கழிந்தாலும் நேருவையே குறை சொல்வது


P. SRINIVASALU
ஏப் 04, 2024 14:31

இருவரும் வெறும்வாயில் வடை சுடுவதில் வல்லவர்கள்


தஞ்சை மன்னர்
ஏப் 04, 2024 14:25

இன்னும் எவ்வளவு நாளைக்கு சொல்லமுடியும் இப்படியே


தஞ்சை மன்னர்
ஏப் 04, 2024 14:24

இப்படி கொல்லி சொல்லியே பத்து வருடமே ஓடி போச்சு


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ