உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாட்டு சக்திகளுடன் காங்கிரஸ் கைகோர்ப்பு: பா.ஜ., - எம்.பி.,க்கள் குற்றச்சாட்டு!

வெளிநாட்டு சக்திகளுடன் காங்கிரஸ் கைகோர்ப்பு: பா.ஜ., - எம்.பி.,க்கள் குற்றச்சாட்டு!

புதுடில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஓ.சி.சி.ஆர்.பி., எனப்படும், புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான அமைப்புடன் கைகோர்த்து, நம் பார்லிமென்ட் நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி முடக்குகிறது. வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் நம் நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது என, பா.ஜ., - எம்.பி.,க்கள் குற்றம் சுமத்தியதை தொடர்ந்து, இரு சபைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது.காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டி' கூட்டணி கட்சியினர் லோக்சபாவுக்கு நேற்று கருப்பு நிற ஜெர்கின் அணிந்து வந்தனர். அதில், 'மோடியும், அதானியும் ஒண்ணு' என்றும், 'அதானி பாதுகாக்கப்படுகிறார்' என்றும் குறிப்பிடப்பட்ட, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு இருந்தது.இதை, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டித்தார். அவர் பேசுகையில், ''எதிர்க்கட்சிகளின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் கருப்பு உடை அணிந்து வந்து சபையில், 'பேஷன் ஷோ' நடத்துகின்றனர். இது சபையின் கண்ணியத்தை குலைக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்,'' என்றார்.

லோக்சபா ஒத்திவைப்பு

இதைத் தொடர்ந்து, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே பேசியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த, ஓ.சி.சி.ஆர்.பி., எனப்படும், 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் குறித்த செய்தி வெளியிடும் அமைப்பு' நம் நாட்டுக்கு எதிராக பல்வேறு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. பெகாசஸ் உளவு, கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் மீது சந்தேகம், ஹிண்டன்பர்க் ரிப்போர்ட் உள்ளிட்ட விவகாரங்களை வெளியிட்டது. இவை பார்லிமென்ட் கூடுவதற்கு முன் வெளியிடப்படுவதை கவனிக்க வேண்டும். அந்த செய்தியை வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி பார்லி., நடவடிக்கைகளை முடக்குவதை வழக்கமாக வைத்துள்ளது. இவர்கள் ஓ.சி.சி. ஆர்.பி., உடன் கூட்டு சேர்ந்து, நாட்டின் வளர்ச்சியை சிதைக்க சதி செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.இதே விவகாரம் ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. பா.ஜ., - எம்.பி., சுதான்ஷு திரிவேதி பேசியதாவது: துாதரக அளவிலும், பொருளாதார ரீதியாகவும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், நம் நாட்டின் நிறுவப்பட்ட அமைப்புகள் மற்றும் பொருளாதார, சமூக நலன்கள் மீது வெளிநாட்டு சக்திகள் தாக்குதலை முன்னெடுக்க துவங்கியுள்ளன.

திட்டமிட்ட சதி

இந்த சக்திகள், ஓ.சி.சி.ஆர்.பி., அமைப்புக்கு, நிதி உதவி அளிப்பதாக பிரான்ஸ் நாட்டு ஊடகம் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அமைப்புக்கு அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் ஆதரவாக உள்ளார். இந்திய தேர்தல்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருப்பதாக, ரஷ்ய அரசு சமீபத்தில் தெரிவித்துள்ளது. இது நம் ஜனநாயகத்துக்கே ஆபத்தானது.இவை இயல்பாக நடக்கிறதா அல்லது திட்டமிட்ட சதியா என்பது தெரிய வேண்டும். இயல்பாக நடப்பது என்றால், இதுகுறித்து சபையில் விவாதிக்கலாம். திட்டமிட்ட சதி எனில், விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தங்கள் மீது வீண்பழி சுமத்துவதாக, சபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.

எம்.பி.,க்களுக்கு எச்சரிக்கை

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உட்பட, 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள், 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்ட கருப்பு சட்டை அணிந்து சபைக்கு வந்ததை, சபாநாயகர் ஓம்பிர்லா வன்மையாகக் கண்டித்தார். ''லோக்சபா நடவடிக்கை மற்றும் ஒழுங்கு விதி 349ன்படி, தேசியக்கொடியை தவிர, வேறு எந்த பேட்ஜ்களையும் சட்டைப்பையில் அணிந்து சபைக்குள் உறுப்பினர்கள் வரக்கூடது. சபையின் கண்ணியத்தை குலைக்கும் விதமாக உறுப்பினர்கள் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

QCS MCCL
டிச 07, 2024 09:34

காங்கிரசை தடை செய்து சோனியா குடும்பத்தையும், திமுக குடும்பத்தையும், இந்த விவசாயி போர்வை சீக்கிய தீவிரவாதிகளையும் பிடித்து திகாரில் போட்டால் எல்லாம் சரியாகும். தேசதுரகிகளால் நிறைந்த இந்திய உருப்பட சான்ஸே இல்லை. முடிந்தால் வேறு அமைதியான நாடுகளில் போய் செட்டில் ஆகப்பார்க்கவேண்டும்.


p.s.mahadevan
டிச 06, 2024 13:30

சபா நாயகரால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும். காலம் தாழ்த்தாமல் எடுக்கலாமே . பிஜேபி எம்பிக்களும் " ராகுல் - சோரோஸ் சோர் சோர் " என்று சட்டை அணியட்டுமே.


Barakat Ali
டிச 06, 2024 11:56

பிரியங்காவின் வயநாடு வெற்றியைக் கண்ட கணவர் வாத்ராவுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது ..... வயநாடு வாக்காளர்களுக்கு நன்றி ......


Sampath Kumar
டிச 06, 2024 10:48

மீண்டும் மீண்டும் கோயபல்ஸ் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும் பிஜேபி முதல ரஷ்யாஉளவு பிரிவு செய்தி என்று போட்டார்கள் இப்போ அமெரிக்கா ளவு பிரிவு செய்தி என்று போடுகிறார்கள் ஆக மொத்தத்தில் தத்தி பிஜேபி கட்சி வெறும் மதவாத அரசியல் செய்ய மட்டுமே உண்டான ஒரு கட்சி நாட்டின் ஏற்றத்துக்கு இல்லை குஜராதிகளை உம உயர்த்தி விட ஒரு பிரதமர் வெக்க கேடு நாடு விளக்கிங்கிடும்


Barakat Ali
டிச 06, 2024 09:57

இனிமேல் ஆட்சிக்கு வரமாட்டோம், அந்த அளவுக்கு மக்கள் ஆதரவு இருக்கப்போவதில்லை என்று தெரிந்துவிட்டதால் அமெரிக்கன் டீப் ஸ்டேட் நோக்கத்தை நிறைவேற்றப் பாடுபடுகிறார்கள் .....


Kubendran Narayanasamy
டிச 06, 2024 09:04

நாடு விளங்கவேண்டும் என்றால் நமக்கு தேவை காங்கிரஸ் முக்த் பாரத்


orange தமிழன்
டிச 06, 2024 08:53

பப்பு மற்றும் பப்பி அரசியலை விட்டு ஒழிந்தால் தான் நாட்டுக்கு நல்லது...


அப்பாவி
டிச 06, 2024 08:50

ஜீயும், ஜெய்யும் போட்டி போட்டுக்கிட்டு அமெரிக்கா பிவாய்ங்க. அங்கே போய் அஃபிசியல் விவகாரத்தை மட்டும் பாக்காமல் இந்திய வம்சாவளியைப் பாக்குறோம்னு அரசியல் பண்ணிட்டு வந்தால் அது தேஷ் பக்தி. நம்பு கோவாலு.


வாய்மையே வெல்லும்
டிச 06, 2024 10:46

இப்படிக்கு குட்டி சப்பான் முதலமைச்சரின் உபி அடிவருடி யின் உளறல் நம்பு


GMM
டிச 06, 2024 08:40

தெளிவாக தெரிகிறது காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதி? அதானியை குற்றச்சாட்டும் போது அவரால் சிலர் பலனடைந்து இருப்பர். அப்போது திமுக போன்ற கட்சிகள் பலன் பெற்று இருக்கும் என்ற சந்தேகம் அடிப்படையில் குற்றம் சாட்ட வேண்டிய நிலை வரவேண்டும்? அது ஏன் தவிர்க்க படுகிறது. அதானி தனக்கு தானே லஞ்சம் கொடுத்து கொண்டாரா ?


Dharmavaan
டிச 06, 2024 08:21

ஸ்பீக்கர் இவங்களை வெளியேற்றவேண்டும் பிறகு சபையை நடத்த வேண்டும்


SUBBU,MADURAI
டிச 06, 2024 08:56

Embossed on the back of that T-shirt is Main Aur Mera Bai Soar Hai.