உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கண்டம் தப்பினார் காங்கிரஸ் தலைவர்; தபால் ஓட்டில் தலை தப்பியது!

கண்டம் தப்பினார் காங்கிரஸ் தலைவர்; தபால் ஓட்டில் தலை தப்பியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கடைசி நேரத்தில் காங்கிரஸ் தலைவர் நானா படோல் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளார். மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளை வென்று மாபெரும் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி வெறும் 49 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன்மூலம், மஹாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இந்தத் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்த நிலையில், சகோலி தொகுதியில் போட்டியிட்ட மஹாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் கடைசி நேரத்தில் வெற்றி வாகை சூடினார். 10வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் அவினாஷ் பிரமான்கரை விட நானா படோல் 476 ஓட்டுக்கள் பின்தங்கியிருந்தார். பின்னர், 15வது சுற்றின் முடிவில் 535 ஓட்டுக்கள் முன்னிலை பெற்றார். கடைசி சுற்றான 28வது சுற்றின் முடிவில் மீண்டும் 658 ஓட்டுக்களில் பின்தங்கினார் படோல். அதன்பிறகு, தபால் ஓட்டுகளும், சில சுற்றுகளின் ஓட்டுக்களை மறு எண்ணிக்கை செய்ததில், கூடுதல் ஓட்டுக்கள் குவிந்தன. இதனால், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பு நிலவியது. இறுதியில், படோல் 208 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ngm
நவ 24, 2024 18:40

தப்புத் தப்பு. EVM பத்தி சந்தேகம் என பப்பு, garbage புகார்


rajan
நவ 24, 2024 14:39

பேப்பர் மூலம் போடப்பட்ட ஓட் அப்படித்தான.


duruvasar
நவ 24, 2024 11:01

தபால் ஓட்டுக்கள் மூலம் தப்பித்து பிழைப்பது காங்கிரஸின் சமீபத்திய ட்ரெண்ட்


ஆரூர் ரங்
நவ 24, 2024 10:44

அங்கு முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தொகுதிகளில் கூட ஒரு முஸ்லிமை கூட நிறுத்தாத பிஜெபி பெரிய வெற்றியடையடைந்துள்ளது ஆச்சர்யம். சிறுபான்மை தாஜா அரசியல் முடிவுக்கு வந்தது.


பேசும் தமிழன்
நவ 25, 2024 08:51

தமிழகத்திலும் சிறுபான்மை தாஜா அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.. அந்த நாள் தான் தமிழ்நாட்டின் விடிவுகாலம் பிறக்கும் நாள்.. வடக்கே மற்றும் மேற்கே உள்ளவர்கள் எப்போதோ திருந்தி விட்டார்கள்.. நாம் எப்போது திருந்த போகிறோம் ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை