உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது காங்கிரஸ் ஆட்சியில் செய்ததை விட 16 மடங்கு அதிகம்: பிரதமர் மோடி பெருமிதம்

இது காங்கிரஸ் ஆட்சியில் செய்ததை விட 16 மடங்கு அதிகம்: பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசம் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ரூ.1 லட்சம் கோடியைப் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெற்றதை விட 16 மடங்கு அதிகம் என பிரதமர் மோடி தெரிவித்தார். அருணாச்சலப் பிரதேசத்திற்கு சென்ற பிரதமர் மோடி ரூ.5,100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அவர் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் வரி செலுத்துவோர் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அவர்களிடம் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இட்டாநகரில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=10j14lti&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அருணாச்சலப்பிரதேசம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் பூமி. இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் இரட்டை நன்மைகளுக்கான எடுத்துக்காட்டாக இன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். பிரதமரான பிறகு 70 முறைக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டது.

2 லோக்சபா தொகுதிகள்

சூரியனின் கதிர்கள் முதலில் விழும் இடம் அருணாச்சலப் பிரதேசம் என்றாலும், இங்கு வளர்ச்சி ஏற்பட பல ஆண்டுகள் ஆனது. அருணாச்சலப்பிரதேசத்தில் குறைவான மக்கள் மட்டும வசிக்கின்றனர். இங்கு இரண்டு லோக்சபா தொகுதிகள் மட்டுமே உள்ளது என காங்கிரஸ் புறக்கணித்தது. இது போன்ற காங்கிரசின் மனநிலை அருணாச்சலப்பிரதேசம் உட்பட வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவித்தது.

16 மடங்கு

அருணாச்சலப் பிரதேசம் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ரூ.1 லட்சம் கோடியைப் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெற்றதை விட 16 மடங்கு அதிகம். டில்லியில் அமர்ந்தபடியே வடகிழக்கு மாநிலத்தை மேம்படுத்த முடியாது என்பதை அறிந்திருந்ததால், அமைச்சர்கள், அதிகாரிகளை அடிக்கடி அந்தப் பகுதிக்கு அனுப்பினேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

raju
செப் 24, 2025 15:10

16 மடங்கு ஊழல் அதிகம்மா?


KOVAIKARAN
செப் 22, 2025 17:51

இங்கே மோடி அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அறிவாலய 200 ரூபாய் அடிமைகளே, செய்தியை நன்றாக மூளை இருந்தால், அதை கொஞ்சம் உபயோகித்து படித்து, புரிந்து கருத்து போடுங்கள். மோடி என்ன கூறினார் என்றால், காங்கிரஸ் 70 வருட ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்களை ஒதுக்கிவிட்டார்கள் என்று. மேலும், பிஜேபி ஆட்சியில் கடந்த பத்து வருடங்களில் மொத்தம் ஒரு லட்சம் கோடி - Rs.100,000 கோடி கொடுத்துள்ளார்கள் என்று கூறியதை வாசிக்கவில்லையா? காங்கிரஸ் ஆட்சியில் அருணாச்சல பிரதேசத்தின் ஒருபகுதியை சீனாவிற்கு தாரை வார்த்துக் கொடுத்ததை மறந்துவிட்டீர்களா? அதைத் தொடர்ந்து சீனா அருணாசலத்தின் ஒரு சில பகுதிகளுக்கு உரிமை கொண்டாடிவருதை மறந்து விட்டீர்களா? அப்படி சீனா உரிமைகொண்டாடும் பகுதிகள் நமது இந்திய நாட்டிக்கச் சொந்தமானது என்று, பிஜேபி அரசு 2014ல் ஆட்சிக்கு வந்த முதல் இன்றும் சொல்லி வருவது தெரியாதா? அந்தக் காரணங்களுக்காக அருணாச்சல பிரதேச மாநிலம் அருகில் உள்ள சீனா எல்லைப்பகுதியின் எல்லைப் பாதுகாப்புப் படையை பலப்படுத்தியது / அதிகப்படுத்தியது தெரியாதா? தினமலர் போன்ற உயர் தரமான செய்தித்தாள்களையம் படிங்கள். எந்த விஷயத்தையும் நன்கு தெரிந்து கருத்து தெரிவியுங்கள்.


Venugopal S
செப் 22, 2025 17:46

கேட்கிறவன் கேனை என்றால் என்ன சொன்னாலும் நம்புவார்கள்!


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 22, 2025 16:54

காங்கிரஸ் அருணாசலப் பிரதேசத்தை சீனாவுக்கு தாரை வார்த்து விட இருந்தது அதனால் அதிகம் செலவிட வில்லை.


Nathansamwi
செப் 22, 2025 16:53

15 வருடம் இவங்க ஆட்சி பண்ணிட்டு இப்போவும் காங்கிரஸ் எ குத்தம் சொல்றது தான் ஏத்துக்க முடிய மாட்டீங்குது ..


raju
செப் 22, 2025 16:04

இவர் எப்படி ஒர நாட்டின prime minister ஆக இருக்க mudikirathu .. 1990 ல Rs5000 சம்பளம்r இன்று 150,000 vankukirar. ஆனாலும் அதே வாழ்வியல் முறை .. inflation பற்றி தெரியாத மனுசன்


Priyan Vadanad
செப் 22, 2025 15:47

மக்கள் எப்படியும் நம்புவாங்கன்னு நமது பிரதமர் அடிச்சி உடுறாரே அதான் எனக்கு பிடித்திருக்கிறது.


Moorthy
செப் 22, 2025 15:33

நல்ல தொப்பி ,நல்ல வேஷம்... காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்து அகன்று 12 ஆண்டுகள் தொடர்ந்து மோடிதான் பிரதமர் இன்னும் எத்தனை காலம் காங்கிரஸ் மீது குறை சொல்லுவார் ?


Thirumal s S
செப் 22, 2025 14:45

இவன் பணவீக்கம் பற்றி தெரிந்து தான் பேசுரானா


Priyan Vadanad
செப் 22, 2025 15:50

அவன் இவன் என்று ஏக வசனம் வேண்டாமே.


முருகன்
செப் 22, 2025 13:56

அப்போது எரிபொருள் விலை என்ன இப்போது எவ்வளவு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை