உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பால் கொள்முதல் விலை உயர்வு காங்., - எம்.எல்.ஏ., கோரிக்கை

பால் கொள்முதல் விலை உயர்வு காங்., - எம்.எல்.ஏ., கோரிக்கை

கோலார்: பால் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்த வேண்டும் என, முதல்வரிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக, மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா கூறி உள்ளார்.மாலுாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கோலார் மாவட்டத்தில் நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளோம். யாராவது ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். மாலுாரில் கட்சியை கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளேன். மிகவும் சிரமப்பட்டு இரண்டாவது முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றேன்.பா.ஜ.வில் கோஷ்டி பூசல் அதிகரித்து உள்ளது. நாட்டில் பா.ஜ., செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்தனர். அந்தக் கட்சியின் மாநில தலைவருக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுகிறது. காங்கிரஸ் வலுவாக உள்ளது.மாநிலத்தின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட வேண்டும். இதுகுறித்து முதல்வர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார். விவசாயிகள் நலன் கருதி பால் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்த வேண்டும் என்று நாங்களும் கோரிக்கை வைப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை