மேலும் செய்திகள்
இந்திய கம்யூ., நுாற்றாண்டு நிறைவு விழா
8 hour(s) ago
பெங்களூரு: ''கன்னடர்களுக்காக சிறை செல்லவும் தயார்,'' என்று, காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கூறி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மத்திய அரசின் பாரபட்ச கொள்கை நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக, தென் மாநிலங்கள் குரல் எழுப்பி உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையை கைவிடுங்கள் என்று தான், மத்திய அரசை பார்த்து கூறினேன். நாட்டு பிரிவினை பற்றி பேசவில்லை. நான் பேசியதை பா.ஜ.,வினர் திரித்து உள்ளனர்.கர்நாடகாவில் இருந்து ஆண்டுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரி பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் கர்நாடகாவுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரும்ப கிடைக்கிறது. வரி வருவாயில் நமக்கு 17 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் உத்தர பிரதேசத்திற்கு 430 சதவீதம் கிடைக்கிறது. மத்திய அரசின் பாரபட்சத்தால் கர்நாடகாவின் உள்கட்டமைப்பு மேம்பாடு பாதிக்கப்பட்டு உள்ளது.கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் இருந்த போதே, மேகதாது திட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. நாங்கள் அந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறோம். வாக்குறுதி திட்டங்களால் கர்நாடகா திவாலாகிவிடும் என்று பா.ஜ., கூறியது. ஆனால் அவர்களே இலவசங்கள் அறிவிக்கின்றனர். கர்நாடகா, கன்னடர்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். இதற்காக சிறை செல்லவும் தயார்.இவ்வாறு அவர்கூறினார்.
8 hour(s) ago