உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., பார்லி., குழு தலைவராக சோனியா மீண்டும் தேர்வு

காங்., பார்லி., குழு தலைவராக சோனியா மீண்டும் தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் பார்லிமென்ட் குழு தலைவராக சோனியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.டில்லியில் பழைய பார்லிமென்ட் மைய மண்டபத்தில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பார்லி., குழு தலைவராக சோனியா மீண்டும் தேர்வு செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகாஜூன கார்கே சோனியாவை முன்மொழிந்தார்.கெளரவ் கோகாய், தாரிக் அன்வர் ,சுதாகரன் ஆகியோர் வழிமொழிந்தனர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ‛ இண்டியா' கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அக்கட்சிக்கு ஒரு சுயேச்சை உறுப்பினர் ஆதரவு தெரிவித்ததால், பலம் 100 ஆக உயர்ந்தது. ராஜஸ்தானில் வெற்றி பெற்ற மற்றொரு சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தார். இன்று( ஜூன் 08) காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், பழைய பார்லிமென்டின் மைய மண்டபத்தில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. கட்சி தலைவர் கார்கே, சோனியா, ராகுல், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள், லோக்சபாவுக்கு தேர்வான காங்., எம்.பி.,க்கள் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சியின் பார்லி குழு தலைவராக சோனியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Syed ghouse basha
ஜூன் 08, 2024 22:36

வாழ்த்துகள் அன்னை சோனியா ஜி


krishna
ஜூன் 08, 2024 23:46

SYED UN KUMBALUKKU MAFIA MAINO DESA VIRODHA CONGRESSAI MATTUME PIDIKKUM.SUPER.


Ramesh Sargam
ஜூன் 08, 2024 19:46

சோனியா இருக்கும்வரையில் அவர்தான் தலைவர். வேறு யாரும் அந்த பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே கூடாது. கப் சிப் ஆக இருக்கவேண்டும். தெரிஞ்சுதா?


Gopalan
ஜூன் 08, 2024 18:22

கார்கே அவர்களுக்கு எதிர் கட்சி தலைவர் ஆக தேர்வு செய்தால் நல்லது. மறுபடியும் சோனியா ராகுல் தேர்வு செய்தால் சோதனை தான் மிஞ்சும். ஏற்கனவே ஹெரால்ட் கேசு காத்திருக்கும்.


Marimuthu Kaliyamoorthy
ஜூன் 08, 2024 19:00

OTHER CONGRESS MEMBERS SEEMS NOT TRUST WORTHY. NO CONFIDENCE. I HAVE NO FAITH ON MY SHIRT. HOW THE AGE OLD PARTY MOVES?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை