உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., வேட்பாளர் முதல் பட்டியல் பிப்ரவரி இறுதியில் வெளியீடு

காங்., வேட்பாளர் முதல் பட்டியல் பிப்ரவரி இறுதியில் வெளியீடு

மங்களூரு: “லோக்சபா தேர்தலுக்கு, காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் பிப்ரவரி இறுதியில் வெளியாகும்,” என, மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது தெரிவித்தார்.மங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. பிப்ரவரி இறுதியில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும். இம்முறை தேர்தலில், 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும். ஏற்கனவே கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை பகிரங்கமானது.சில தொகுதிகளுக்கு, தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து, மாநில காங்கிரசுக்கு பட்டியலை அனுப்பி உள்ளோம். பட்டியல் பரிசீலிக்கப்படுகிறது. விரைவில் முடிவு செய்யப்படும்.தட்சிண கன்னடா தொகுதிக்கு, ஐந்து பேரின் பெயரை அனுப்பி உள்ளோம். கட்சி மேலிடம் திறமையான வேட்பாளர்களை தேர்வு செய்யும். ஐந்து வாக்குறுதித் திட்டங்கள், மத்திய பா.ஜ., அரசின் 10 ஆண்டு மோசமான ஆட்சி, காங்கிரசுக்கு வெற்றியை தேடித்தரும்.கர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு அதிகமான தொகுதிகள் கிடைக்காது என, பா.ஜ.,வுக்கு புரிந்துள்ளது. எனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலத்துக்கு வந்து கூட்டம் நடத்தினார்.மங்களூரின், அட்யாரில் உள்ள சஹ்யாத்ரி பொறியியல் கல்லுாரி மைதானத்தில், மாநில அளவிலான காங்கிரஸ் தொண்டர்கள் மாநாடு, வரும் 17ல் நடக்கவுள்ளது. தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே துவக்கி வைப்பார். மாநில தலைவர் சிவகுமார் தலைமை ஏற்பார். முதல்வர் சித்தராமையா, மாநில பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா உட்பட பலர் பங்கேற்பர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை