உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் சொத்தை அபகரிக்க முயற்சிக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மக்கள் சொத்தை அபகரிக்க முயற்சிக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

போபால்: காங்கிரஸ் கட்சி தங்கள் சொத்தை காப்பாற்றிவிட்டு, மக்கள் சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கின்றது, அவர்கள் ஆட்சிக்கு வந்தால் வாரிசுரிமை வரியை அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.மத்திய பிரதேசம் மாநிலம் மொரீனா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இங்குள்ள மக்கள் தேசத்தை முதன்மையாக கருதுபவர்களை எப்போதும் ஆதரிப்பர். ஒரு பிரச்னையில் இருந்து விடுபட்டு வெளியே வந்துவிட்டால், அதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என ம.பி., மக்களுக்கு தெரியும். காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு எதிரான கட்சி. மத்திய பிரதேசத்திற்கு பா.ஜ., புதிய அடையாளத்தை அளித்துள்ளது. காங்கிரசின் இருண்ட காலகட்டத்தைப் பார்க்கும்போது, பா.ஜ., ஆட்சியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அதிகம் அனுபவித்து வருகிறோம்.

தேசமே பெரிது

பா.ஜ.,வுக்கு தேசத்தை விட எதுவும் பெரிது கிடையாது. ஆனால் காங்கிரசுக்கு குடும்பம்தான் முதலில்; நாட்டிற்காக அதிகபட்ச பங்களிப்பையும், கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் செய்பவரை பின்னால் நிறுத்த வேண்டும் என்பதே காங்கிரசின் கொள்கை. எனவே, பல ஆண்டுகளாக, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் போன்ற ராணுவ வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. பா.ஜ., அரசு அமைந்தவுடன் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தினோம்.

வாரிசுரிமை வரி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும். நாட்டு மக்களின் சொத்துகளை எக்ஸ்ரே எடுத்து கணக்கிட காங்., திட்டமிட்டுள்ளது. மக்களின் சொத்துகளை பறித்து தங்கள் ஓட்டு வங்கிக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது. வாரிசுரிமை வரி தொடர்பான உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. முன்பெல்லாம் பெற்றோரின் சொத்துகளில் ஒரு பகுதி, குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு, ஒரு பகுதி அரசு எடுத்துக்கொள்ளும். ஆனால், சொத்துகள் அரசுக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக, அப்போதைய பிரதமர் ராஜிவ், வாரிசுரிமை வரியை ரத்து செய்தார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் சொத்துகளை தக்கவைக்க அவர் இந்த வரியை ரத்து செய்தார். தங்கள் சொத்துகளை காப்பாற்றிவிட்டு தற்போது நாட்டு மக்களின் சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கின்றனர். ஆட்சிக்கு வந்தால் வாரிசுரிமை வரியை அமல்படுத்த காங்., திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Lion Drsekar
ஏப் 25, 2024 16:16

மக்கள் சொத்தை அபகரிக்காதவர்கள் யார் ? வீட்டு மனை வாங்கினால் பதிவு செய்யும் வரை பணம் கொடுத்தவருக்கு சொந்தம், வாங்கியவர் ஜாதி, மதம் , அரசியல் தொடர்பு நிலையைப் பொறுத்து இவர் வாங்கிய நிலம் இவருக்கே நீடித்திருக்குமா என்ன நடக்கும் என்பதே தெரியாது சொந்த வீடு கட்டி வாடகைக்கு கொடுத்தாலும் சொந்தக்காரர் நடுத்தெரு , காவல் நிலையம், நீதிமன்றம் மிகப்பெரிய இடமாக இருந்தால் ஆள்பவர்கள் அல்லது எதிரே வரிசையில் அமர்பவர்கள் தயவை நம்பித்தான் வாழவேண்டிய நிலை வந்தே மாதரம்


M S RAGHUNATHAN
ஏப் 25, 2024 15:43

மோடி முதல் வரை குஜராத்தில் முதல் அமைச்சர் ஆக இருந்தார் அவர் அந்த சமயத்தில் வாங்கிய சம்பளத்தில் நாற்பது லக்ஷம் சேமிப்பு இருந்தது இல் அவர் பிரதமர் ஆக தேர்ந்து எடுக்கப் பட்டு Delhi செல்லும்போது அந்த சேமிப்பு பணம் அனைத்தையும் அவருக்கு உதவியாளர்கள் ஆக இருந்த அலுவலக கடைநிலை பணியாளர்கள், அவருடைய துணிமணிகளை துவைத்தவர், முதல் மந்திரியின் வீட்டில் வேலை பார்த்த தோட்டக் காரர்கள், சுத்தம் செய்த பணியாளர்கள், சமையல் அறை உதவியாளர்கள், ஓட்டுநர் ஆகியோருக்கு பிரித்து கொடுத்து டெல்லி சென்றார் இதுதான் " Redistribution of Wealth" இதைப்போல் எந்த Congress தலைவர் செய்து இருந்தால் பதிவு போடவும் தற்போதைய காங்கிரஸ் தலைவர்கள் உடனே காமராஜ், கக்கன் என்று கூவ வேண்டாம்


Kasimani Baskaran
ஏப் 25, 2024 13:56

காங்கிரசுக்கு கொள்கையோ கோட்பாடோ கிடையாது மாறாக கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்கள்


GMM
ஏப் 25, 2024 13:50

பரம்பரை சொத்து வரி கொடிய சிந்தனை பொருள் தேடும் ஆர்வம் முடங்கும் மக்கள் உழைக்க மாட்டார்கள் அபகரிப்பு எண்ணம் வளரும் உலகம் முழுவதும், மேற்கத்திய, இஸ்லாம் நாடுகளில் செயல் படுத்த முடியுமா? தனியார் சொத்து வாரிசுக்கு அல்லது கோவிலுக்கு கொடுப்பது வழக்கம் அப்படி அரசு எடுத்தால், அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்தல் இல்லாமல் ஏற்க வேண்டும் காங்கிரஸ் தேர்தல் விஷமம்


SWAMI VIDYANANDA
ஏப் 25, 2024 13:12

ஜாதிரீதியாக,மதரீதியாக மக்களைப் பிரிக்க காங்கிரஸ் பல திட்டங்களை வைத்திருக்கிறார்கள் இனி பிஜேபி கையிலிருந்து ஆட்சியை யாராலும் கைப்பற்ற முடியாது காலா காலத்திற்கும் அவர்களே நாட்டை ஆள்வார்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை