உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசை புகழும் சசி தரூர்: அதிருப்தியில் காங்கிரஸ்

மத்திய அரசை புகழும் சசி தரூர்: அதிருப்தியில் காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ' ஆபரேஷன் சிந்தூர் ' குறித்து விவரிக்க பனாமா நாட்டிற்கு சென்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர், அங்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை பாராட்டி பேசியுள்ளது, காங்கிரஸ் மேலிடத்தை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டி பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சி தலைவர்கள் சிலர், சசிதரூருக்கு கண்டனம் தெரிவித்தாலும், விமர்சனம் செய்தாலும் அதனை சசிதரூர் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், ' ஆபரேஷன் சிந்தூர் ' குறித்து வெளிநாடுகளிடம் விவரிக்கும் குழுவில் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் மீறி சசி தரூர் இடம்பெற்றுள்ளார். அவர் பனாமா நாட்டில் நிருபர்களிடம் கூறுகையில், ' பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கண்ணோட்டம் மாறிவிட்டது. பயங்கரவாதிகளும் இந்தியாவை பார்த்து பயப்பட துவங்கிவிட்டனர். பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என அவர்களும் உணரத்துவங்கிவிட்டனர். இதில் சந்தேகம் வேண்டாம். முதல்முறையாக, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி சென்ற இந்தியா, 2015 ம் ஆண்டு உரி தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் தாக்குதல் மூலம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு முன்னர் அப்படி நடந்தது இல்லை.கார்கில் போரின் போது கூட அப்படி செய்யவில்லை. உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அதனை செய்தோம். 2019 புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் போது எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை மட்டுமல்லாமல், சர்வதேச எல்லையை தாண்டி, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத தலைமையகம் மீது தாக்குதல் நடத்தினோம். இந்த முறை இந்த இரண்டு பகுதிகளையும் தாண்டி சென்று பாகிஸ்தானின் இதயப்பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள், அதன் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தினோம் ' எனக்கூறினார்.சசி தரூர் இவ்வாறு தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவாக பேசுவது காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறும் போது, ' சசி தரூர் பேசுவது எல்லாம் கட்சியின் கருத்து அல்ல,' எனக்கூறினார்.அதேபோல் மற்றொரு தலைவரான பவன்கெரா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சர்ஜிக்கல் தாக்குதல் நடந்தது என்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேட்டி அடங்கிய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, சசிதரூரின் பார்வைக்கு எனக் குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் சசிதரூரின் பேட்டியில் காங்கிரஸ் மகிழ்ச்சி அடையவில்லை என்பதை காட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

முருகன்
மே 29, 2025 06:29

இவர் எதிர்ப்பது கிடைக்கும் வரை பாராட்டு மழையில் நனைய வைப்பர் அடுத்த கட்சியில் குழப்பம் ஏற்படுத்துவதே......


Kasimani Baskaran
மே 29, 2025 04:09

காங்கிரஸ் கோமாளிகள் கூடாரம். அதில் ஓரிருவர் ஏற்றுக்கொள்ளுமளவுக்கு தேசியம் பேசுபவர்கள். அரசுக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரிந்தவர் சசி தரூர்.


naranam
மே 29, 2025 00:02

ராஹூல் ஜெய் ராம் ரமேஷ் பவன் கேரா போன்றவர்கள் வயிற்றெரிச்சல் பார்ட்டிகள்.


naranam
மே 29, 2025 00:01

ராஹூல் ஜெய் ராம் ரமேஷ் பவன் கேரா போன்றவர்கள் வயிற்றெரிச்சல் பார்ட்டிகள்.


naranam
மே 29, 2025 00:02

ராஹூல் ஜெய் ராம் ரமேஷ் பவன் கேரா போன்றவர்கள் வயிற்றெரிச்சல் பார்ட்டிகள்.


naranam
மே 29, 2025 00:02

வயிற்றெரிச்சல் பார்ட்டிகள்.


Karthik
மே 28, 2025 22:57

ஆயிரம் தான் இருந்தாலும் அந்நிய இத்தாலி நாட்டு அரசியல் கட்சி அன்னிய நாட்டுக்கு தான் ஆதரவு கொடுக்குமே தவிர சொந்த தாய் நாட்டுக்கு உண்மையா இருக்குமா அப்படின்னு கேட்டா சந்தேகம் தான். அதே நேரம் தற்போது வெளிநாடு சென்ற சசிதரூர் இந்திய அரசையும், இந்திய ராணுவத்தையும் விமர்சித்து பேசியிருந்தால் அதை காங்கிரஸ் மனதார வரவேற்று மார்தட்டி கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஏனெனில் காங்கிரசின் டிசைன் அப்படி.


krishna
மே 28, 2025 22:45

ILLAI KANAVILAA.


ஈசன்
மே 28, 2025 22:22

காங்கிரஸ்காரன் அனைவரும் இந்திய நாட்டில் தானே வாழுகின்றனர். நம் நாட்டு சோத்தைதானே சாப்பிடுகின்றனர். இந்த தேச துரோக கூட்டத்தில் ஒரு நல்லவன் கூட இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களா? 30 வருடங்களுக்கு முன்பு இவர்கள் ஆட்சியில் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது ஐநாவில் காஷ்மீர் பிரச்னை பற்றி பேச ஒரு வலுவான பேச்சாளர் தேவை பட்டது. அது போல் எவரும் காங்கிரஸ் கட்சியில் இல்லை. அப்போது மணாலியில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் வாஜ்பாயை அமெரிக்காவுக்கு அனுப்பி பேச வைத்தது நரசிம்மராவ் அரசு. நீங்கள் இந்திய அரசின் எதிர்க்கட்சி தலைவர் தானே என்று வாஜ்பாய் அவர்களை கேட்டார்கள். அதற்கு நான் இந்திய அரசின் சார்பில் இங்கு வந்துள்ளேன் என்றும், தான் எடுக்கும் முடிவை இந்திய அரசு ஏற்று கொள்ளும் என்றும் ஆணித்தரமாக பேசிவிட்டு வெற்றிகரமாக இந்தியா திரும்பினார். அவரை protocol பார்க்காமல் அன்றைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா விமான நிலையம் சென்று வரவேற்றார் என்பது சரித்திரம். அன்றைய எதிர்க்கட்சியான பிஜேபி இந்த நிகழ்வை பெருமையுடன் பேசியது. சிறிய சூழ்நிலை மாற்றங்களுடன் இப்போதும் கிட்டத்தட்ட அதே போல் நிகழ்ந்துள்ளது. இன்றைய தேச துரோக காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் இது தான் வித்தியாசம்.


Ramesh Sargam
மே 28, 2025 22:02

Operation Sindoor பற்றி பேசியதற்கு ஏன் காங்கிரஸ் அதிருப்தி? அப்படி என்றால் பாகிஸ்தான் தீவிரவாத இடங்களில் இந்தியா நடத்திய தாக்குதல் காங்கிரஸ் கட்சிக்கு விருப்பமில்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை