உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா ராகுல்?: கேரள எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு

நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா ராகுல்?: கேரள எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவரா என எனக்கு சந்தேகமாக உள்ளது. அவரது டி.என்.ஏ., ஆய்வு செய்யப்பட வேண்டும் என கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ., பி.வி.அன்வர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில் மொத்தமுள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்.,26) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனையடுத்து இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ஜ., ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fgvnfy6o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மா.கம்யூ., - காங்கிரஸ் கட்சிகள் கேரளாவில் தனித்தே போட்டியிடுகின்றன. குறிப்பாக காங்., எம்.பி., ராகுலை எதிர்த்து வயநாடு தொகுதியில் இந்திய கம்யூ., பொதுச்செயலாளர் டி.ராஜா மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். இப்படி தேசிய அளவில் ஒரே கூட்டணியில் இருந்தும், கேரளாவில் எதிரும் புதிருமாக இருக்கும் இந்த கட்சிகள், மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் பிரசாரத்தில் பேசிய ராகுல், ''முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளபோது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?'' என விமர்சித்திருந்தார்.இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ., பி.வி.அன்வர், ராகுலை கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், ''காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் இரண்டாம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா என எனக்கு சந்தேகமாக உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்'' என்று சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

பேசும் தமிழன்
ஏப் 24, 2024 21:35

எப்போதும் தேச விரோத பேச்சு தான்...இவரது பேச்சு தான் மக்களை அப்படி நினைக்க வைக்கிறது ....யாரும் தன் தாய்நாட்டை பற்றி தவறாக பேச மாட்டார்கள் .....ஆனால் இவர் எப்போதும் வெளி நாட்டில் போய் நமது இந்திய தேசத்தை பற்றி குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார்..... பிறகு எப்படி மக்கள் இவரை நம்புவார்கள் ????


kulandai kannan
ஏப் 24, 2024 17:08

கேரளா தேர்தல் முடிந்தவுடன், இருவரும் கைகோர்த்தார்கள்


kalyanasundaram
ஏப் 24, 2024 16:02

Ghandhi e name is for Gujarathi BANIYANS only This pappu belongs to so many mixtures of blood and unfit to use this ghandhi along with his name is absoultely wrong


Lion Drsekar
ஏப் 24, 2024 14:01

இன்று ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால் அது நரிக்குறவர்கள் பரம்பரை மட்டுமே அவ்வளவு ஒழுக்கம், கட்டுப்பாடு , இன்னமும் பல அறியவகை நல்ல குணங்கள் வந்தே மாதரம்


அருண் பிரகாஷ் மதுரை
ஏப் 24, 2024 13:05

இது ஒரு தவறான அரசியல். யாராக இருந்தாலும் பிறப்பு குறித்து பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு காங்கிரஸ் என்ன பதில் கூறும் என்பதை விட இது எப்போது பேசப்படுகிறது என்பதே குறிக்கப்பட வேண்டிய விஷயம்.. சரியாக தமிழ்நாடு தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மோதல், காங்கிரஸ் திமுக சனாதன மோதல், காங்கிரஸ் பாஜக மேகதாது அரசியல்.. இவைகள் எல்லாம் மறைமுகமாக மக்களை மடை மாற்றும் நிகழ்வு. இண்டி கூட்டணி கட்சிகளுக்கு உள்ள ஒரே ஒற்றுமை சிறுபான்மை ஆதரவு நிலைப்பாடு, ஹிந்து எதிர்ப்பு மற்றும் ஊழல்.. வேறு எந்த ஒற்றுமையும் கடுகளவும் கிடையாது.. பேச்சு நாகரிகம் சுத்தமாக கிடையாது..


MANI DELHI
ஏப் 24, 2024 15:13

இதெல்லாம் கூட்டணிக்குள்ள சகஜம் புள்ளி கூட்டணி அங்காளிகள் ஆனா பங்காளிகள் இல்லை நீங்க பேசுறது நாகரிகம் குறித்து அநாகரி கூட்டணிக்கு பொருந்தாத


CHANDRASEKARAN
ஏப் 24, 2024 12:37

அவரே எப்போதாவது தான் சரியாக கேள்வி கேட்கிறார் தோழர்களிடம் நேரடி பதில் இருந்தால் தானே வரும். ஆக இந்த இருவரின் விவாதம் குறித்து தமிழ்நாடு புள்ளி கூட்டணியிலுள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் காரர்களிடம் கேட்க, media வுக்கும் துணிவு இல்லை. இந்தியாவைக் காப்போம் என்ற கூட்டணி ,- மக்கள் சிரிக்கிறார்கள்


ஆரூர் ரங்
ஏப் 24, 2024 12:17

DNA சோதனை மனிதனா இல்லையா என்பதையும் காட்டிவிடும். ஆனால் மனநிலை பாதிப்பை? கம்யூனிஸ்டு தத்துவமே மனநிலைக் கோளாறால் உருவானது.


Srinivasan Krishnamoorthi
ஏப் 24, 2024 12:14

இந்த ஆராய்ச்சி தேவையா இப்போ


Natarajan Ramanathan
ஏப் 24, 2024 12:12

இதில் என்ன சர்ச்சை இருக்கிறது?


A1Suresh
ஏப் 24, 2024 12:07

நேரு ஒரு காமெடி பீஸ்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ