உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் வேலை எடுபடாது; பா.ஜ.,வுக்கே மெஜாரிட்டி: ஹரியானா முதல்வர் சொல்லும் கணக்கு!

காங்கிரஸ் வேலை எடுபடாது; பா.ஜ.,வுக்கே மெஜாரிட்டி: ஹரியானா முதல்வர் சொல்லும் கணக்கு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: 'ஹரியானா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸின் வேலை எடுபடாது, பா.ஜ.க., முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்,' என மாநில முதல்வர் நயப் சிங் சைனி தெரிவித்தார்.ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டம் சிவானில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானாவில், காங்கிரஸ் கட்சி, மக்களிடம் பொய்யான மிகப்பெரிய வாக்குறுதி அளித்து வெற்றி கண்டது. காங்கிரஸின் பொய்யான வாக்குறுதியை மக்கள் கண்டுபிடித்து விட்டனர். அந்தமாதிரியான வாக்குறுதி ஹரியானாவில் எடுபடாது,வெற்றியை தராது.அக்டோபர் 5 சட்டமன்ற தேர்தல் நடந்த பின்னர், பா.ஜ.க.,தான் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும். அதற்கான வளர்ச்சிப்பணிகளை தொடங்கிவிட்டது. நீங்கள் பாருங்கள், பா.ஜ.க., மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று மூன்றாவது முறை ஆட்சியை பிடிக்கும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ