உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசவிரோத சக்திகளுடன் காங்.,

தேசவிரோத சக்திகளுடன் காங்.,

காஷ்மீர் விடுதலை என்ற கொள்கை உடைய வெளிநாட்டு நிறுவனம், ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையின் நிதியுதவியில் இயங்கும் ஆசிய - பசிபிக் ஜனநாயக தலைவர்கள் மன்றத்தின் துணை தலைவர் பொறுப்பை சோனியா ஏற்று உள்ளார். தேசவிரோத வெளிநாட்டு சக்திகளுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. சுதான்ஷு திரிவேதிராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,

'காமெடி கிங்' ராகுல்!

ராகுலுக்கு நகைச்சுவை செய்வது தான் சிறப்பாக வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிரான அவரின் அவதுாறு கள் அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. தன் இருப்பை காட்டிக்கொள்வதற்காக 'காமெடி கிங்' ராகுல் அதானி விவகாரத்தை வைத்து மத்திய அரசுக்கு எதிராக அவதுாறு முயற்சியில் இறங்கியுள்ளார்.தர்மேந்திர பிரதான்மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஹிந்துத்துவா நோயா?

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபாவின் மகள் இல்திஜா முப்தி ஹிந்துத்துவா ஒரு நோய் என கூறியுள்ளார். நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் பற்றிய அறிவில்லாதவர்களுக்கு மீண்டும் சனாதன கலாசாரம் பற்றி பாடம் கற்பிக்க வேண்டும்.முக்தர் அப்பாஸ் நக்விமூத்த தலைவர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை