உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் தோல்விக்கு காரணம் அதன் தலைமை தான்: பார்லியில் அமித்ஷா பேச்சு

காங்கிரஸ் தோல்விக்கு காரணம் அதன் தலைமை தான்: பார்லியில் அமித்ஷா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' காங்கிரஸ் தோல்வியடைவதற்கு வாக்காளர் பட்டியலோ மின்னணு ஓட்டு இயந்திரமோ காரணம் அல்ல. அந்த கட்சியின் தலைமைதான் காரணம்,'' என லோக்சபாவில் அமித்ஷா பேசினார்.தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்து லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: தேர்தல் சீர்திருத்தம் குறித்து இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இது குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இல்லை என்ற தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தின. விவாதத்துக்கு பார்லிமென்ட் உயர்ந்த இடம் என்பதை நான் தெளிவாக சொல்கிறேன். பாஜ - தேஜ கூட்டணி விவாதத்தில் இருந்து விலகி ஓடியதில்லை. எந்த விவகாரம் குறித்தும் பார்லிமென்ட் விதிமுறைகளின்படி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yy0jfpjz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பாதுகாப்பாக இருக்குமா

எஸ்ஐஆர் குறித்து இந்த அவையில் விவாதிக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளோம். எஸ்ஐஆர் என்பது தேர்தல் கமிஷனின் பொறுப்பு. தேர்தல் கமிஷனும், தலைமைத் தேர்தல் கமிஷனரும் அரசின் கீழ் செயல்படவில்லை. விவாதம் நடத்தி கேள்வி எழுப்பப்பட்டால், அதற்கு யார் பதில் அளிப்பார்கள்? கடந்த நான்கு மாதங்களாக எஸ்ஐஆர் குறித்து பொய்கள் பரப்பப்பட்டன. நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டன.ஒரு நாட்டின் பிரதமரையும், மாநில முதல்வரையும் ஊடுருவல்காரர்கள் தீர்மானித்தால் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்க முடியுமா? வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவது தான் எஸ்ஐஆர். இது சில கட்சிகளின் அரசியல் நோக்கங்களை பாதிக்கும். அந்த கட்சிகளுக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன். இந்த நாட்டின் வாக்காளர்கள் அவர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். ஊடுருவல்காரர்கள் தான் ஓட்டுப்போடுவார்கள். தற்போது அவர்களும் செல்ல உள்ளனர்

கடந்த நவ.,05 ல் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஹைட்ரஜன் குண்டை செயலிழக்க செய்தார். ஹரியானாவில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். அதற்கு தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்திவிட்டது. அந்த வீடோ, அல்லது வாக்காளர்களோ போலி கிடையாது.

வரலாறு

காலத்திற்கு ஏற்ப வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது முக்கியம். இதற்காகவே 2025ல் எஸ்ஐஆர் பணியை தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது. இறந்தவர்கள், வெளிநாட்டவர்களின் பெயரை நீக்கவே எஸ்ஐஆர் நடக்கிறது. எஸ்ஐஆர் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். முதல் எஸ்ஐஆர் பணிகள் 1952ல் நடந்தன. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நேரு பிரதமராக இருந்தார். இரண்டாவது எஸ்ஐஆர் 1957ல் நடந்தது. அப்போதும் நேரு பிரதமராக இருந்தார். மூன்றாவது முறையாக நேரு பிரதமராக இருந்த போது 1962ல் நடந்தது.1965 -66 ல் பெரியளவில் எஸ்ஐஆர் நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தார்.அடுத்ததாக இந்திரா, ராஜிவ், நரசிம்மராவ் ஆகியோர் பிரதமராக இருந்த போதும், பிறகு பாஜவின் வாஜ்பாய், காங்கிரசின் மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமராக இருந்தபோதும் எஸ்ஐஆர் நடந்தது. அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடப்பதற்கு இது தேவைப்பட்டது. வாக்காளர் பட்டியல் மோசடியாக இருந்தால் எப்படி தேர்தல் நேர்மையாக நடக்கும்?

இரட்டை வேடம்

ராஜஸ்தான், சத்தீஸ்கர், தமிழகத்தில் பாஜ தோல்வியை சந்தித்துள்ளது. அப்போது தேர்தல் சிறந்தது என்றனர். நாங்கள் வெற்ற பெற்ற போது தேர்தல் மோசடி என்கின்றனர்.நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் கமிஷன் சிறந்தது என்கின்றனர். தோற்கும்போது தேர்தல் கமிஷனை குறை சொல்கிறீர்கள். இது போன்ற இரட்டை வேடம் இனிமேல் பொருந்தாது.நாடு விடுதலைக்கு பிறகு, சர்தார் வல்லபாய் படேலுக்கு 28 பேரின் ஆதரவு இருந்தது. நேருவுக்கு 2 பேரின் ஆதரவு மட்டுமே இருந்தது. ஆனால், ஓட்டுத் திருட்டு மூலம் நேரு பிரதமர் ஆனார். இரண்டாவது ஓட்டுத்திருட்டு இந்திரா செய்தார். தேர்தல் முடிவை நீதிமன்றம் ரத்து செய்த போது, தனக்கு தானே அதிகாரம் அளித்துக் கொண்டார். மூன்றாவதாக ஓட்டுத்திருட்டு, நாட்டின் குடிமகனாக ஆவதற்கு முன் சோனியா எப்படி வாக்காளர் ஆனார் என்ற விவகாரம் நீதிமன்றத்தை எட்டியுள்ளது.

தோல்விக்கு காரணம்

வாக்காளர் பட்டியல் புதிதோ அல்லது பழையதோ காங்கிரஸ் தோற்பது நிச்சயம். பாஜ வெற்றி பெற்றதை விட தோல்வியை சந்தித்துள்ளது. அப்போது நாங்கள் தேர்தல் கமிஷனை கேள்வி கேட்டது இல்லை. எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனின் பிம்பத்தை கெடுத்து விட்டன. வாக்காளர் பட்டியலில் முறைகேடு என்றால், நீங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்?காங்கிரஸ் தோல்வியடைவதற்கு வாக்காளர் பட்டியலோ மின்னணு ஓட்டு இயந்திரமோ காரணம் அல்ல. உங்களின் தலைமைதான் காரணம். காங்கிரஸ் தோற்கும் பாரம்பரியம் 2014 ல் துவங்கியது. ஆனால், அக்கட்சி 1989ல் ராஜிவ் கொண்டு வந்த மின்னணு ஓட்டு இயந்திரம் மீது குறை சொல்கிறது. மின்னணு ஓட்டு இயந்திரம் முதல் முறை பயன்படுத்தப்பட்ட 2004 மற்றும் 2009ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இரண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 2014 தோல்விக்கு பிறகு குறை சொல்ல ஆரம்பித்துவிட்டது. ஓட்டுப்பெட்டிகளை கைப்பற்ற முடியாது. முறைகேடு செய்து தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால், எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன.பிரதமரின் சுற்று பயணத்துக்கும், தேர்தல் அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் எப்போதும் மக்கள் மத்தியில் இருக்கிறார். தேர்தல் சீர்திருத்தம் குறித்து 2014 முதல் காங்கிரஸ் எந்த ஆலோசனையும் வழங்கியதில்லை. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

ராகுல் குறுக்கீடு

அப்போது குறுக்கிட்டு காங்கிரஸ் எம்பி ராகுல் பேசியதாவது: ஓட்டு திருட்டு தொடர்பாக ஆதாரங்களுடன் விவாதிக்க தயார். ஹரியானா வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக எனது குற்றச்சாட்டுக்கு பதில் என்ன ? ஹரியானாவில் ஒரே முகவரியில் 500 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் கமிஷனர்கள் மீது நடவடிக்கை எடுக்காதபடி அதிகாரம் கொடுத்தது ஏன்? ஹரியானா வாக்காளர் பட்டியல் தொடர்பாக பல கேள்வி எழுப்பினேன். ஒரு கேள்விக்கு மட்டும் அமித்ஷா பதிலளித்துள்ளார். எஸ்ஐஆர் தொடர்பான விவாதத்துக்கு அமித்ஷா அஞ்சுகிறார் என்றார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, ''அவையில் நான் என்ன பேச வேண்டும் என்பதை ராகுல் முடிவு செய்ய முடியாது. அவர் பொறுமையாக இருக்க வேண்டும். ஹரியானாவில் உள்ள முகவரி பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. அங்கு பல குடும்பங்கள் வசிக்கின்றனர். கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சலில் வெற்றி பெற்ற போது வாக்காளர் பட்டியலை குறை சொல்லவில்லை. தேஜஸ்வி யாதவ், பிரசாந்த் கிஷோரிடம் இரண்டு வாக்காளர் அட்டைகள் இருந்தன. நேரு, இந்திரா, சோனியா ஆகியோர் லோக்சபாவில் பேசி இருக்கிறார்கள் அதை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்; ஆனால் ராகுல் போன்று விவாதத்திற்கு பயந்து ஓடக்கூடியவர்கள் யாரும் இல்லை'' என்றார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

சோனியா குறித்து அமித்ஷா குறிப்பிட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் போட்டனர். இதன் பிறகு அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Venugopal S
டிச 11, 2025 15:22

காங்கிரஸ் கட்சியின் தோல்வியைப் பற்றி அமித்ஷா ஏன் கவலைப்பட வேண்டும்?


Sadananthan Ck
டிச 11, 2025 08:05

இனி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்றால் சோனியா குடும்பத்திலிருந்து வெளியே வர வேண்டும் அப்போதுதான் இனி வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்


Vijay D Ratnam
டிச 10, 2025 21:10

சத்தமா சொல்லாதீங்க அமித்ஷா அவர்களே, காங்கிரஸ்காரர்கள் காதில் விழுந்து தொலையப்போவுது. பொறவு நெசந்தான் போல இருக்குன்னு தகுதியான திறமையான படிப்பறிவு, செயல்திறன் கொண்ட ஒருவரை முன்னிறுத்த தொடங்கிடப்போறாங்க. அவருக்கு இப்போ 55 வயசு ஆவுது. இன்னும் 25 வருஷத்துக்கு அவர் சொல்படிதான் அந்த கட்சி நடக்கும். இது உங்க கட்சி எவ்ளோ பெரிய அட்வான்டேஜ், அறிய வாய்ப்பு. கஷ்டப்படாம ஜெயிக்கும் வாய்ப்பு. வேலையை பாருங்கஜி.


N S
டிச 10, 2025 21:07

"எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்." எதிர்க்கட்சி தலைவர் "அம்மா நான் போறேன்" என்று வெளிநாடு சென்று விட்டார்.


முருகன்
டிச 10, 2025 20:27

தேர்தல் கமிஷன் தனி அமைப்பு அவர்களை நியமிப்பது யார் நீங்கள் தானே


vivek
டிச 10, 2025 21:25

ஒரு டிஜிபி எடுக்க வக்கில்லையே முருகா


Kasimani Baskaran
டிச 11, 2025 04:30

திருடனுக்கு யோக்கியமான டி ஜி பி வந்துவிடக்கூடாது என்பது முக்கியம்.


முருகன்
டிச 11, 2025 07:05

உன் கருத்து மட்டும் சரியான இடத்தில் வருகிறது


M Ramachandran
டிச 10, 2025 20:01

முற்றிலும் உண்மை. உணமைய்யம் புறம்பாகவும் நாட்டிற்கு எதிராகவும் செயல்படுவது எதிர் காட்சியாகா நேர்மையாக ஆளு ம் கட்சியை அவர்கள் செயல்பாடுகளை விமர்சித்திருந்தால் மக்கள் ஏற்று கொள்வார்கள் அதை விட்டு நம் எதிரி நாடுகளுடன் கைய்ய கொணர்த்து அவர்கள் சொல் படி நடப்பதை இஙகு கலவரம் உண்டாக்க முனைந்தால் எப்படி ஏற்று கொள்வார்கள். இந்த அடிப்படை கூட தெரியாத புத்தி தெளிவில்லாமல் செய்ய முனைந்தால் மக்கள் புறம் தள்ளி விட்டு செல்வார்கள்.


பேசும் தமிழன்
டிச 10, 2025 19:40

கான் கிராஸ் கட்சி தலைமை தான் தோல்விக்கு காரணம் என்று பொதுவாக கூறி... எடுபிடி கார்கேவை ஏன் பெரிய ஆளாகக்க வேண்டும்.... கான் கிராஸ் கட்சி தோல்விக்கு காரணம் இத்தாலி போலி காந்தி கும்பல் தான் என்று வெளிப்படையாக கூற வேண்டியது தானே ???


Skywalker
டிச 10, 2025 19:40

Khangress is garbage


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை