உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேட்பாளரை கணக்கில் கொள்ளுங்கள்!

வேட்பாளரை கணக்கில் கொள்ளுங்கள்!

தட்சிண கன்னடா: மங்களூரில் நேற்று நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்த பேட்டி:வாக்காளர்கள் கட்சியை பார்க்கக் கூடாது; வேட்பாளரை பார்க்க வேண்டும். அது தான் ஜனநாயகத்தின் அழகு. பொருத்தமானவர் என நாம் நினைக்கும் நபரை, நம் பிரதிநிதியாக தேர்வு செய்ய வேண்டும்.நம் கஷ்டங்களை அவர் தீர்த்து வைப்பாரா? தேவைப்படும்போது அவரை தொடர்பு கொள்ள முடியுமா? நாம் தேர்வு செய்யும் நபர், நம்முடன் இருக்க வேண்டும். கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்; அவை வியாபாரமாகி விட்டன. உங்கள் விருப்பப்படி ஓட்டுப்போட வேண்டும்.எனக்கு எந்த கட்சியிலும் சேர விருப்பம் இல்லை. சமூகமும், ஊடகத்தினரும் என்னை மதிக்கின்றனர். அதுவே போதும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்