உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் பாக்., கொடி விற்பனை: ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியாவில் பாக்., கொடி விற்பனை: ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நமது நாட்டில் ஆன்லைன் இணையதளம் மூலம் பாகிஸ்தான் தேசியக் கொடி, அந்நாட்டின் சின்னங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ' ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.இச்சூழ்நிலையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பாகிஸ்தான் கொடி மற்றும் சின்னங்களை இந்தியாவில் விற்பனை செய்வதாக மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் பிரஹலாத் ஜோஷிக்கு அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு கடிதம் மூலம் புகார் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் கொடிகள் மற்றும் அந்நாட்டு நினைவுச்சின்னங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், உபயு இந்தியா, தி பிளாக் நிறுவனம் மற்றும் தி பிளாக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நுகர்வோர் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இந்த பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்துவதுடன், நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Natarajan Ramanathan
மே 16, 2025 20:54

நான் பாகிஸ்தான் மற்றும் பாலஸ்தீன கொடிகளை வாங்கி எனதுவீட்டில் மிதியடியாக பயன்படுத்துகிறேன்.


மீனவ நண்பன்
மே 16, 2025 20:34

நர்சரிகளில் உலக நாடுகளின் கொடிகள் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருக்கின்றன


r.thiyagarajan
மே 16, 2025 19:47

Well said need to boycott


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை