உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அத்துமீறிய அசாம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

அத்துமீறிய அசாம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

புதுடில்லி, அசாமில், 47 குடும்பத்தினரின் வீடுகளை இடித்து தள்ளிய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதற்காக, மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் வீடுகளை, 'புல்டோசர்' வைத்து இடிப்பது தொடர்ந்து நடந்து வந்தது. இது போன்ற நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறிய உச்ச நீதிமன்றம், அக்., 1 வரை நாடு முழுதும் இந்த நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான அசாமில் காம்ரூப் மாவட்டத்தின் கட்ச்தோலி பதார் கிராமத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக்கூறி, 47 குடும்பங்களின் வீடுகளை மாநில அரசு இடித்தது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவில், 'சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் முன் அனுமதி பெற்று அங்கு வசித்து வந்தோம். ஆனால், காம்ரூப் மாவட்ட நிர்வாகம் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி புல்டோசர் வைத்து இடித்து தள்ளியுள்ளது. 'இது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயல். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்தஉத்தரவு:நீதிமன்ற இடைக்காலத் தடை அமலில் உள்ளபோது, 47 குடும்பத்தினரின் வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. இது நீதிமன்ற அவமதிப்பாக கருதி, அசாம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். இதற்கு, மூன்று வாரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரை, புல்டோசர் நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 01, 2024 09:23

மூர்க்கம் சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு காஃபிர்களை தண்டிக்கலாம் .. துன்புறுத்தலாம்... சிக்காத் செய்து ஒடுக்கலாம் ... ஆனால் மூர்க்கத்தை புல்டோசர் வைத்து தூக்கக்கூடாது .......


Rajan
அக் 01, 2024 06:58

நிறைய கேஸ் தேங்கி இருக்குனு புலம்புவது பாஜக அரசுக்கு எதிராக இருந்தால் உடனே சாட்டையை சுழற்றுவது புரியவில்லை


Kasimani Baskaran
அக் 01, 2024 05:29

குற்றச்செயலில் ஈடுபட அரசியலமைப்புச்சட்டம் ஒருவருக்கு உரிமம் கொடுக்கவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் சென்றால் அடுத்த தலைமுறை கூட கோர்ட்க்கும் வக்கீலுக்கு பணம் அழுது நொடித்துப்போய் விடுவார்கள்.


GMM
அக் 01, 2024 05:22

மக்களுக்கும் - மக்களுக்கும் உள்ள பிரச்சனையை தீர்க்க தான் நீதிமன்றம். அரசுக்கும் - மக்களுக்கும் உள்ள பிரச்சனையை நீதிமன்றம் அதிகம் எடுத்தால் , அரசுக்கும் - நீதிமன்றத்திற்கும் , மன்றத்திற்கும் மக்களுக்கும் உள்ள பிரச்சனையை யார் , எப்படி தீர்ப்பது. ?


J.V. Iyer
அக் 01, 2024 02:55

நல்ல அரசுகளை இப்படிச்செய்வது இவர்களுக்கு பொழுது போக்காகிவிட்டது. ஊழல் செய்தவனை ஜாமீனில் வெளி வர உதவுவது எந்த முறையில் சரியானது என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். ஊழல் செய்த அமைச்சர்களை உள்ளே தள்ளுவதுதானே இவர்கள் கடமை?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை