உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா.,வில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல், 160 தொகுதிகளில் போட்டி: பா.ஜ., திட்டம்

மஹா.,வில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல், 160 தொகுதிகளில் போட்டி: பா.ஜ., திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் வரும் சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ள பா.ஜ., முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்காமல் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மஹாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பாஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து வந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றனர். எதிர்க்கட்சியான ‛ மஹா விகாஸ் அகாதி' கூட்டணியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, காங்கிரஸ், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 288 தொகுதிகள் கொண்ட இம்மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி 30 தொகுதிகளிலும், பாஜ., கூட்டணி 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.இதனையடுத்து வரும் சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., தீவிரமாக உழைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இம்முறை 160 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ள பா.ஜ., முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்காமல் தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும் அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sundarsvpr
ஜூலை 21, 2024 16:20

. மோடிக்கு பின் யார் என்பதில் இவரும் ஒருவர். இவர் தலைமையில் போட்டியிடுவது சிறந்த வியூகம்.


Swaminathan L
ஜூலை 21, 2024 14:49

ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்பாரத்த வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. அஜித் பவாரை துணை முதல்வராக்கி வைத்து விட்டு, ஊழலை ஒழிப்போம், ஊழல் செய்வோரை உள்ளே தள்ளுவோம் என்கிற பாஜக கோஷம் மஹாராஷ்டிர மக்களிடம் எடுபடவில்லை போலிருக்கிறது. இந்த கூட்டணி எதிர்ப்பு ஓட்டுகளால் இண்டி கூட்டணி அதிக இடங்களில் வென்றது. சட்டசபை தேர்தலிலும் அதே நிலை தொடரும் என்றே தோன்றுகிறது, பாஜக தலைமை தகுந்த வியூகம் அமைக்கவில்லையென்றால்.


Columbus
ஜூலை 21, 2024 13:37

Keeping options open. They may bring in Nitin Gadkari and shift Devendra Phadnavis to Centre.


தஞ்சை மன்னர்
ஜூலை 21, 2024 12:54

நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளரை அறிவிக்காமல் போட்டியிட்ட இந்தியா கூட்டணியை கேலி செய்த கட்சி அதை வெளியில் சொல்லி கிண்டல் செய்த பிரதம வேட்பாளர் தன் கட்சி ஆளும் ஒரு மாநில தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தைரியம் இல்லை ஹி ஹி


Duruvesan
ஜூலை 21, 2024 13:55

ராஜ் மதியபிரதேஷ் ஹிமாச்சல் இங்க எல்லாம் முதல்வர் யாருன்னு சொல்லல, முரசொலி அறிவாளி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை