உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீரில் தொடரும் பதற்றம்; 6 தொழிலாளர்கள் 1 டாக்டர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் தொடரும் பதற்றம்; 6 தொழிலாளர்கள் 1 டாக்டர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் எனும் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானம் நடைபெற்று வருகிறது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்டர் ஒருவரும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இதையடுத்து, பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில், அனந்த்நாக் பகுதியில் தங்கி, கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அசோக் சவுகான் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஷோபியான் மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதன் பிறகு நடந்த மற்றொரு சம்பவம் இதுவாகும். கடந்த ஏப்ரல் மாதம் புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான உமர் அப்துல்லா, இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Saai Sundharamurthy AVK
அக் 21, 2024 12:05

ஜார்ஜ் சோரஸ் கூட்டணிக்கு நன்றாக தெரியும்.


Saai Sundharamurthy AVK
அக் 21, 2024 12:03

இதற்கெல்லாம் காரணம் யார் என்று ராகுல்காந்திக்கு தெரியும்.


vbs manian
அக் 21, 2024 08:58

ஜம்மு காஷ்மீர் மறுபடியும் பால் மாறுகிறதா.


அப்பாவி
அக் 21, 2024 06:34

இவிங்க அரசியல்ல அப்பாவி மக்கள் பலி. இஸ்ரேலில் கூட நம்மாளுங்களுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும் போலிருக்கு.


Kasimani Baskaran
அக் 21, 2024 05:23

காங்கிரஸ் வெளியில் இருந்து குசும்பு செய்யும், அதே சமயம் ஓமர் கட்சி உள்ளிருந்து அதன் வேலையை காட்டும். இராணுவம் அதன் வேலையை காட்டினால் திருந்த வாய்ப்பு உண்டு.


raja
அக் 21, 2024 03:56

இந்த கொலைகளுக்கு தேர்தல் அக்டோபர்க்குள் நடக்க வேண்டும் என்று தீர்ப்பு சொன்ன நீதிபதிகள் தான் காரணம்.....


Sathyanarayanan Sathyasekaren
அக் 21, 2024 03:30

சொரணை இல்லாத, திருட்டு திராவிட கொள்ளையர்கள், கான் ஸ்கேம் காங்கிரஸ் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு வோட்டை போடும் ஹிந்துக்களே, இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருங்கள் நல்ல உங்களுக்கும் இதே நடக்கலாம். சென்னை பல்கலைக்கழக பேராசியர் தமிழகத்தில் தீவிரவாத குழுக்களுக்கு ஆள் சேர்த்தார் என்று கைது செய்யப்பட்டார். வோட்டை பிச்சைக்காக தமிழக போலீஸ் துறையை கையில் வைத்து இருக்கும் தமிழக சூப்பர் நம்பர் ஒன்னு முதல்வர் மட்டும், அவரது வாரிசும் இதற்க்கு பதில் சொல்வதற்கு பதிலாக, ஹிந்தியை திணிக்கிறார்கள் என்று உங்களை திசை திருப்பிக்கொண்டு இருக்கிறார்.


Kumar Kumzi
அக் 21, 2024 00:13

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எக்காலத்திலும் கொடுக்க கூடாது பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லுங்கள்


Nandakumar Naidu.
அக் 20, 2024 22:33

தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத இன வெறி பிடித்த கட்சி ஆட்சியில் அமர்ந்து விட்டதல்லவா, இனி மேல் இதெல்லாம் நடக்கும்.