உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா திடீர் மரணம் 

ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா திடீர் மரணம் 

பெங்களூரு: கர்நாடக ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா, மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்து உள்ளார்.கர்நாடக ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா, 84. வயோதிகம், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், பெங்களூரு ரூரல் ஜோதிபுரா கிராமத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். நேற்று காலை 10:00 மணியளவில், திடீர் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்தார். கெம்பண்ணா மறைவுக்கு முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்து உள்ளார்.'எக்ஸ்' வலைதள பக்கத்தில், 'ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா மறைவு வருத்தம் அளிக்கிறது. பா.ஜ., ஆட்சியில் நாடு முழுதும், தலைப்பு செய்தியான 40 சதவீத கமிஷன் மோசடியை வெளிக்கொண்டு வந்து, ஒப்பந்த பணிகளில் ஊழலுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தார். 'எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாத குரலை, நாடு இழந்து உள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினருக்கு வேதனையை தாங்கும் சக்தியை கடவுள் அளிக்கவும் பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டு உள்ளார்.கடந்த பா.ஜ., ஆட்சியில் அமைச்சர்கள், ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் கேட்பதாக, கெம்பண்ணா பரபரப்பு குற்றச்சாட்டு கூறி இருந்தார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதி, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். கெம்பண்ணா பயன்படுத்திய 40 சதவீத கமிஷன் என்ற வார்த்தையை வைத்தே, பா.ஜ.,வை, எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் விமர்சித்தது.ஆட்சி மாறிய நிலையில், காங்கிரஸ் ஆட்சியிலும் 40 சதவீத கமிஷன் கேட்கப்படுவதாக, கெம்பண்ணா குற்றச்சாட்டு கூறி இருந்தார். 'ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவை தொகை விடுவிக்கவில்லை என்றால், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்' என்றும் எச்சரித்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி