உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்ச்சை கருத்து விவகாரம்: ராகுலுக்கு கோர்ட் சம்மன்

சர்ச்சை கருத்து விவகாரம்: ராகுலுக்கு கோர்ட் சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ : லோக்சபா தேர்தலின் போது பொருளாதார கணக்கெடுப்பு தரவுகளை வைத்து வர்க்க ரீதியாக வெறுப்பை பரப்ப முயன்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது தொடரப்பட்ட வழக்கில், உத்தர பிரதேச நீதிமன்றம் அவர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தில் லோக்சபா தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், பொருளாதார கணக்கெடுப்பில் உள்ள விபரங்களை வைத்து பேசினார். அப்போது, 'விளிம்பு நிலை மக்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், அவர்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் அளவு குறைவாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அதிக மக்கள் தொகை இருப்பவர்கள், அதிக சொத்துக்கள் கேட்பர்' என கூறினார். இது அரசியல் ஆதாயத்திற்காக வர்க்கரீதியாக வெறுப்பை துாண்டி, மோதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய ஹிந்து மஹா சங்கத்தின் மண்டல தலைவரான பங்கஜ் பதக் என்பவர், ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்டில் இது தொடர்பாக மனு அளித்தார். அந்த மனுவை நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, பரேலி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதை விசாரித்த நீதிபதி ஜன., 7ல் ராகுல் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

M Ramachandran
டிச 23, 2024 09:25

நான் யாருக்கும் எதற்கும் கட்டு பட மாட்டேன். ராஜா வீட்டு கன்னுகுட்டி


Kanns
டிச 23, 2024 09:06

SHAMEFUL JUSTICE


ramani
டிச 23, 2024 09:02

மண்டையில் மூளைக்கு பதில் மசாலா இருக்கும் போலிருக்கிறது


Kalyanaraman
டிச 23, 2024 08:32

முதுகெலும்பற்ற, ஆண்மையற்ற நமது சட்டங்களில் மூலம் இதுவரை தண்டனை கொடுக்க முடியவில்லை. ஏற்கனவே 12 வழக்குகளில் பெயிலில் இருக்கும் ராகுலுக்கு இது 13 வது வழக்கு அவ்வளவுதான். நீதிமன்றத்தின் நேரமும் பணமும் விரையம். பாமரன் மீது மட்டுமே நமது சட்டங்கள் தனது வீரத்தை காண்பிக்கும்.


Dharmavaan
டிச 23, 2024 10:59

அது சட்டத்தின் தவறல்ல பொறுப்பற்ற பச்சோந்தி இடது சாரி நீதிகளின் தவறு. எதோ ஒன்றை மழுப்பி நீதி வழங்குவது போல் மென்மையாக தட்டி தப்பிக்க விடுவது.. கையாள்பவன் திருடனானால் ஆயுதத்தின் மேல் ஏன் பழி


Kasimani Baskaran
டிச 23, 2024 07:47

வடக்கே வழக்குகளை விசாரிக்க மாட்டேன் என்று பயத்தில் நீதிபதிகள் விலக மாட்டார்கள் - ஏனென்றால் அதிகம் கொலீஜிய நீதிபதிகள். ஆகவே ஒன்றும் நடக்காது.


Senthil Kumar
டிச 23, 2024 07:10

மக்களை குழப்பி விட்டு அவர்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்த ராகுல் கேண்டி பலமுறை முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான் இவன் இப்பொழுது பல வெளிநாட்டு நிறுவனங்களின் கை பாவையாக மாறி இந்தியாவை கைப்பற்ற பல்வேறு கீழ்த்தரமான தந்திரங்களை பயன்படுத்தி வருகிறான். இவனை தேச துரோக வழக்கில் கழிவு செய்து இந்திய நாட்டை விட்டு வெளியேற்றினால் மட்டுமே அது இந்தியாவின் வளர்ச்சிக்கும் அமைதியான சூழ்நிலைக்கு நான் நல்லதாக அமையும்.


Dharmavaan
டிச 23, 2024 06:50

இடது சாரி நீதிகள் கொலீஜியும் முறை ஆனது அது ஒழிந்தால்தான் நீதி கிடைக்கும்


N.Purushothaman
டிச 23, 2024 06:34

ராவுல் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசவிரோதியாகி பல ஆண்டுகள் ஆகின்றன ....


Barakat Ali
டிச 23, 2024 06:19

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க உதவும் தந்திரம் இளவலின் தந்திரம் ..... சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை மக்களை மற்றவர்களுக்கு எதிராக உணர்ச்சிகொள்ள தூண்டவே பேசப்பட்ட பேச்சு ..... மக்களை பிரித்தாள நினைக்கிறது இந்த சோரசின் பாட்டுக்கு ஆட்டம்போடும் தேசவிரோத கும்பல் ..... லாடம் கட்டவேண்டும் .... மத்திய அரசு செயலற்றதாகிவிட்டதா ???? மீண்டும் எமர்ஜென்சி தேவையென்றால் அதைச்செய்து தேசவிரோதிகளை ஒடுக்குங்கள் .... சிறுபான்மையினரை நாட்டுக்கு எதிராகத் தூண்டிவிட்டு எங்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள் .....


seshadri
டிச 23, 2024 05:35

ராகுலின் எம் பி பதவி பறிப்பு வழக்கு உச்ச நீதி மன்றத்தால் நிறுத்தி வைக்க பட்டது. அந்த வழக்கு என்ன ஆனது அவ்வளவுதானா. பணம் பதவி இருந்தால் எந்த ஒரு வழக்கும் யாரையும் ஒன்றும் செய்யாது. நமது நீதி துறை மீதி துறையாகி நீண்ட நாட்களாகி விட்டது.


Rpalni
டிச 23, 2024 07:51

இதற்கு தீர்வு வாரிசு கொலிஜியம் முறை ஒழிக்கப்பட்டு கடுமையான தேர்வு ஒன்றே


N.Purushothaman
டிச 23, 2024 08:45

ஆந்திராவை சேர்ந்த ஓர் எம் எல் ஏ சென்னம்மனேனி இரட்டை குடியுரிமை வைத்து இருந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் எப்படி நடந்து கொண்டது என்பதை பார்த்தாலே புரியும் ....


Dharmavaan
டிச 23, 2024 08:58

நீதிகளுக்கு அரசு அதிகாரிக்களுக்கான நடத்தை விதிமுறைகள் மத்திய அரசு கொண்டு வர வேண்டும. இவர்களும் சாமானியர்கள் சட்டம் படித்தவர் என்பது தவிர எந்த தனி தகுதியும் பண்புகளும் அற்றவர்கள் ஊழலும் உண்டு. பிறர்க்கு பாடம் உள்ள இவர்களுக்கு என்ன அருகதை


Duruvesan
டிச 23, 2024 10:50

அவரு வாழ் நாள் பெயில் ல இருக்காரு


முக்கிய வீடியோ