உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புகைப்படத்தால் சர்ச்சை

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புகைப்படத்தால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் பெண்ணின் தோள் மீது கை வைத்த அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் படம் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பாட்னாவில், மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மத்திய அமைச்சர் அமித்ஷா, முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6q4ecbwf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு பெண் பயனாளிக்கு உதவி வழங்கிய போது, புகைப்படம் எடுப்பதற்காக அவரது தோளைப் பற்றி இழுத்து நிதிஷ்குமார் நிற்க வைத்தார். இந்த புகைப்படம் வெளியானதை அடுத்து, அங்குள்ள முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் விமர்சித்துள்ளது. தன் சமூக வலைதள பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்த அக்கட்சி, 'மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், முதல்வர் நிதிஷ் ஒரு பெண்ணை ஆட்சேபனைக்குரிய வகையில் எப்படி இழுக்கிறார் பாருங்கள். உடல்நிலை சரியில்லாத முதல்வராலும், உதவியற்ற பா.ஜ.,வாலும் பீஹார் அவமானப்படுகிறது' என, குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Natarajan Ramanathan
ஏப் 01, 2025 10:50

இதில் ஒருசதம்கூட தவறு இருப்பதாகவே தெரியவில்லை.


venugopal s
மார் 31, 2025 18:02

பாவம்,அவர் கூட்டு சேர்ந்த இடம் அப்படி!


பேசும் தமிழன்
மார் 31, 2025 15:46

மகள் அல்லது சகோதரி போல் நினைத்து செய்திருந்தால்..... அதில் தவறு ஏதும் இல்லை..... எதையும் தவறான கண்ணோட்டத்தில்.... பார்ப்பது.... பார்ப்பவரின் மனநிலை சரியில்லை என்பதையே காட்டுகிறது.


நரேந்திர பாரதி
மார் 31, 2025 13:43

மகளை போல எண்ணி செய்திருக்க வாய்ப்புண்டு.


rama adhavan
மார் 31, 2025 12:30

நேற்று தான் மத்திய அரசின் கூட்டணியை இறுதிவரை பிரிய மாட்டேன் என்றார் நிட்டிஷ். எனவே ஏதோ காரணத்திற்காக இன்று இந்த உருட்டு.


Pandi Muni
மார் 31, 2025 12:21

வளையலை உருவினானே திராவிடன் அதை விடவா


ஆரூர் ரங்
மார் 31, 2025 09:37

எல்லாவற்றிலும் குற்றம் காண்பது ஒரு வித மனநோய்.


முருகன்
மார் 31, 2025 12:34

இப்படி முட்டு கொடுத்து முதுகு உடைய போகிறது கவனம்


अप्पावी
மார் 31, 2025 09:13

பிஹாரின் அப்பா. குத்தம் சொல்லப்படாது


sankaranarayanan
மார் 31, 2025 08:47

நிதிஷ் சகோதரி மனப்பான்மையில் தோளில் கை வைத்து அந்த பெண்ணை அழைத்திருக்கிறார் இதில் எந்த தவறும் இல்லை ஐக்கிய ஜனதா தளத்திற்கு எப்போதுமே கண்பார்வை குன்றிவிட்டது அவர்களது கண்ணில் அப்படித்தான் தோன்றும் மாட்டுத்தீவனத்தில் பல ஓடி சம்பாதிக்கும்போது அவர்களது பார்வை பணத்திலாலேயே தான் இருந்தது இப்போது வயது ஆகிவிட்டதால் குன்றிவிட்டது


Shekar
மார் 31, 2025 09:43

நிதிஷ் நிற்கும்போதே சில சமயம் கீழே விழுகிறார் அவ்வளவு பலவீனம், 74 வயதாகிவிட்டது. இவரை இப்படி சொல்வது மலிவு அரசியல்


ManiK
மார் 31, 2025 07:46

இந்த மாதிரி உருப்படாத செய்திகளை வெளியிட்டு தரத்தை குறைக்காதீர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை