உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்து கோவில் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ்காரர் குற்றமற்றவர்: கனடா அரசு

ஹிந்து கோவில் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ்காரர் குற்றமற்றவர்: கனடா அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடாவில், ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஹரிந்தர் சோஹி குற்றமற்றவர் என, அந்நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஆண்டு ஜூனில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்தே, இந்தியா - கனடா உறவு சுமுகமாக இல்லை. இது ஒருபுறமிருக்க, கனடாவில் உள்ள ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. பிராம்ப்டன் நகரில் உள்ள ஹிந்து கோவில் முன், கடந்த 3ம் தேதி போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், அங்கிருந்த ஹிந்துக்களை சரமாரியாக தாக்கினர். இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.இந்த போராட்டம் தொடர்பான வீடியோவில், கனடா போலீஸ் அதிகாரி ஹரிந்தர் சோஹி என்பவர், காலிஸ்தான் கொடியை ஏந்தியபடி போராட்டத்தில் பங்கேற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில், கனடாவின் பீல் பிராந்திய போலீஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்லும்படியும், ஆயுதங்களை ஒப்படைக்கும்படியும் போலீஸ் அதிகாரி ஹரிந்தர் சோஹி வலியுறுத்தி உள்ளார். அவர் போராட்டத்தில் ஈடுபடவில்லை. 'அந்த நேரத்தில் அவர், 'மப்டி'யில் இருந்துள்ளார். விசாரணையில், ஹரிந்தர் சோஹி குற்றமற்றவர் என்பது தெரிய வந்தது' என குறிப்பிடப்பட்டுள்ளது.போராட்டம் நடந்த போது, காலிஸ்தான் கொடியை ஹரிந்தர் சோஹி ஏந்தியது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.மேலும், போராட்டக்காரர்களை கலைக்க அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதும் தெரிகிறது. அப்படியிருக்கையில், அவர் குற்றமற்றவர் என கனடா போலீஸ் தெரிவித்தது, விமர்சனத்துக்குஉள்ளாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 16, 2024 15:21

பிரேக்கிங் நியூஸ். கனடா பிரதமர் ஜஸ்டின் தீடீரென சீக்கிய மதத்திற்கு மதம் மாறி விட்டார். கனடா இனி காலிஸ்தான் என அழைக்கப்படும் என அறிவித்தார். காலிஸ்தான் விசா இல்லா இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு இட்டார். டன்டனைன் டன்டனைன்....


sankaranarayanan
நவ 16, 2024 10:51

இலங்கையில் பிரபாரனுக்கு நேர்ந்த கதி கனடாவில் உள்ள இந்துக்களுக்கு வரலாம் என்றே ஊகிக்கலாம் விரைவில் கனடாவில்வாழும் இந்தியர்கள் ஒன்றாக சேர்ந்த இதற்கு ஒரு முடிவை கட்ட வேண்டும் இல்லையேல் அவர்களின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகிவிடும்


Anand
நவ 16, 2024 10:28

மூர்க்க நாடுகள் போல மாறிவரும் கனடா....


SRIRAM
நவ 16, 2024 08:59

அங்கேயும் ஒரு மாடல் அரசு இந்து மத துவஷி .... விளங்கிடும்..... கனடா வருத்தப்படும்......


Kasimani Baskaran
நவ 16, 2024 05:59

கனடாவில் இப்பொழுதுதான் தனி நாடு கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அடுத்து ஜஸ்டின் டிரூடோ இவர்களுடன் சேர்ந்து தனி நாடு கேட்டாலும் கேட்பார்.


கிஜன்
நவ 16, 2024 05:32

கனடா குடிமக்களே .... உங்கள் நாட்டிற்கு தேவையில்லாத பிரச்னையை தூக்கி சுமக்கிறீர்கள் ... இந்த பிரச்னையை கையிலெடுத்த எங்கள் பக்கத்து நாடு ஒன்று இன்று அதை எப்படி கைவிடுவது என தெரியாமல் திண்டாடுகிறது .... இந்த கூட்டம் ...பொருளீட்டுவதற்காக ..... இதை பண்ணுகிறார்கள்.... ...சீக்கிரம் நல்ல தேசபக்தியுள்ள அரசை தேர்ந்தெடுங்கள் ....


J.V. Iyer
நவ 16, 2024 04:20

சர்ரே, பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் உருவாக இருக்கிறதோ? இதற்கு தற்போதய பிரதமர் ஜஸ்டின் பிரதமர் ஆவாரோ? இந்த போலீஸ்காரருக்கும் பெரும் பதவி காத்திருக்கிறதோ? இப்போது செயல்பட்டால் போர்கிஸ்தானில் உள்ள முழு பஞ்சாபையும் இந்த தீவிரவாத பயங்கரவாதிகளின் காலிஸ்தான் கைப்பற்றலாமே? என்ன கண்றாவியோ.


சமீபத்திய செய்தி