உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.64 கோடி சொத்து வரி செலுத்துங்க மெட்ரோவுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

ரூ.64 கோடி சொத்து வரி செலுத்துங்க மெட்ரோவுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

பெங்களூரு: பாக்கி வைத்துள்ள 64 கோடி ரூபாய் சொத்து வரியை செலுத்தும்படி, நம்ம மெட்ரோவுக்கு பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.பொது மக்களை போன்று, அரசின் பல்வேறு துறைகளும் பெங்களூரு மாநகராட்சிக்கு, கோடிக்கணக்கான ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்துள்ளன. இதை வசூலிக்க முடியாமல் மாநகராட்சி திணறுகிறது. அதே போன்று நம்ம மெட்ரோவும், 64 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்துள்ளது.பெங்களூரு மாநகராட்சிக்கு, பல்வேறு இடங்களில் இருந்து வர வேண்டிய, 4,500 கோடி ரூபாய் சொத்து வரியை வசூலிக்க, மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி, வரி பாக்கியை வசூலிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. நம்ம மெட்ரோவும், 64 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்துள்ளது. இதை செலுத்தும்படி, மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை