உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல் சொத்தினை பள்ளிக்கு தானமாக்க பீகார் அரசு முடிவு

ஊழல் சொத்தினை பள்ளிக்கு தானமாக்க பீகார் அரசு முடிவு

பாட்னா: ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சொந்தமான ரூ. 5 கோடி மதிப்பிலான சொகுசு மாளிகையினை அரசு பள்ளிக்கு தானமாக வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதையடுத்து அதற்கான ஒப்புதல் அமைச்சரவைக்கூட்டத்தில் அளிக்கப்பட்டது. பீ்கார் மாநிலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு மாநில சிறிய அளவிலான நீர்ப்பாசனத்துறை அமைச்சகத்தின் செயலராக இருந்தவர் ஷிவசங்கர்வர்மா , இவர் 1981-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேடராக தேர்வு பெற்றவர். இவர் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ,லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி இவரது வீடு, அலுவலகத்தில் ரெய்டு நடத்தியதில் ரூ. 1.5 கோடி கணக்கில் வராத பணம் மற்றும் பாட்னாவில் பெய்லிசாலையில் இரு மாடி கொண்ட சொகுசு கட்டடம் இவரது பெயரில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 5 கோடி என கூறப்படுகிறது.இவர் மீதான ஊழல் வழக்கு பீகார் சிறப்பு கோர்டில் நடந்துவந்தது. கடந்த 2010-ம் ஆண்டு இவர் லஞ்ச ஒழிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் ஊழல் பணத்தில் இவர் பாட்னாவில் பெய்லி ரோட்டில் சொகுசு கட்டிய மாளிகையும் பறிமுதல் செய்து ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக பீகார் அரசு நேற்று கூட்டிய அமைச்சரவை கூட்டத்தில் மாஜி ஐ.ஏ.ஏஸ்.அதிகாரியின் ஊழல் சொத்தினை முறைப்படி ஜப்தி செய்து பள்ளிக்கட்டடமாக செயல்படுத்துவது என முடிவு செய்து அதற்கான முறையான நடவடிக்கை எடுத்துள்ளது. பி்ன்னர் இந்த ஊழல் சொத்தினை , மாநில மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் நாளை ஒப்படைக்கவுள்ளது. இதற்கு மாநில வருவாய்த்துறையினரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.பீகார் மாநில மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஞ்சானி குமார் சிங் ,இந்த கட்டடத்‌தினை நாளை கையகப்படுத்த உள்ளனர். ஊழலில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்தினை முதன்முறையாக பள்ளி கட்டடத்திற்கு தானமாக வழங்கப்பட்டது முதன்முதலாக பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ