உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இருமல் மருந்து நிறுவனங்களிடம் 10 சதவீதம் கமிஷன் பெற்ற டாக்டர்

இருமல் மருந்து நிறுவனங்களிடம் 10 சதவீதம் கமிஷன் பெற்ற டாக்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ம.பி.,யில் இருமல் மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட டாக்டர் மருந்து நிறுவனங்களிடம் 10 சதவீதம் கமிஷன் பெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 1-6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. 21 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்கள் உட்கொண்ட 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து தான் காரணம் என்பது தெரியவந்தது. இந்த மருந்து தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். இந்த இருமல் மருந்தை பரிந்துரை செய்த டாக்டர் பிரவீன் சோனி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.பிரவீன் சோனி ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிபதி கவுதம் குமார் குஜார் முன்பு விசாரணைக்கு வந்தது.இந்த மனு மீது போலீசார் தாக்கல் பதில் மனுவில், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குறிப்பிட்ட கலவையிலான மருந்தை வழங்க அரசு தடை செய்தது தெரிந்துஇருந்தும் டாக்டர் இந்த மருந்தை வேண்டும் என்றே பரிந்துரை செய்தார். இதற்காக அந்த மருந்தை ஒவ்வொரு முறை பரிந்துரை செய்யும் போது, அதனை தயாரித்த நிறுவனத்திடம் இருந்து 10 சதவீதம் கமிஷன் பெற்றுக் கொண்டார் எனத் தெரிவித்து இருந்தனர்.இதனைத் தொடர்ந்து டாக்டரின் ஜாமின்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KOVAIKARAN
அக் 15, 2025 06:54

அனைத்து மருந்து தயாரிக்கும் இடங்களில் சொல்லாமல் கொள்ளாமல் திடீர் சோதனை மேற்கொண்டால் மேலும் பல அயோக்கியர்கள் சிக்குவார்கள். தரமில்லாத மருந்துகள் கிடைக்கும் என்று நமது வாசகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மிகவும் சிறந்த கருத்து. ஆனால், இங்கே தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக எந்த மருந்து நிறுவனத்திலும் சோதனை மேற்கொள்ளப் படவில்லையே . அதனால் தானே இப்போது வட மாநிலங்களில் சிறு குழந்தைகள் மரணம் ஏற்பட்டுள்ளது. இப்படியாக தமிழத்தின் நிலைமை வட மாநிலங்களில் சிரிப்பாய் சிரிக்கிறது.


ராஜா கோவை
அக் 15, 2025 05:43

சார் விபரம் தெரிந்து தலைப்பு போடுங்கள். எல்லா டாக்டர்களும் மருந்து கடையில் கமிஷன் வாங்குகிறார்கள் ஒரு சிலரைத் தவிர


Ramesh Sargam
அக் 15, 2025 02:01

நாட்டில் உள்ள அனைத்து மருந்து தயாரிக்கும் இடங்களில் சொல்லாமல் கொள்ளாமல் திடீர் சோதனை மேட்கொண்டால் மேலும் பல அயோக்கியர்கள் சிக்குவார்கள். தரமில்லாத மருந்துகள் கிடைக்கும். அப்படிப்பட்ட தரமில்லாத மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும். மக்களின் உயிர் காப்பாற்றப்படவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை