மேலும் செய்திகள்
காங்கிரசுக்கு ஒருபோதும் அழிவே கிடையாது: கார்கே
16 minutes ago
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர்கள் படுகொலை: ஓவைஸி கண்டனம்
4 hour(s) ago | 2
போபால்: மத்திய பிரதேசத்தில், பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பா.ஜ.,வைச் சேர்ந்த கவுன்சிலரின் கணவரான அசோக் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர். ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சத்னா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பாகேலான் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அசோக் சிங்; பா.ஜ., நிர்வாகி. இவரது மனைவி, அப்பகுதியின் பா.ஜ., கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், சத்னா மாவட்ட போலீசில், பெண் ஒருவர் அளித்த புகார்: ஆறு மாதங்களுக்கு முன், அசோக் சிங் என் வீட்டுக்குள் புகுந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதை மொபைல் போனில் வீடியோ எடுத்து, என்னை பல முறை மிரட்டினார். இது குறித்து வெளியே கூறினால், என்னையும், என் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டினார். கடந்த 20ம் தேதி, மீண்டும் என்னை அசோக் சிங் பாலியல் வன்கொடுமை செய்தார். ஆசைக்கு இணங்காவிட்டால் பழைய வீடியோவை வெளியிட்டு அவமானப்படுத்தி விடுவேன் என்றும் மிரட்டினார். இது தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே, அசோக் சிங், பெண் ஒருவரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியானது. அதில், 'என்னை எதுவும் செய்ய முடியாது. நீ எங்கு வேண்டுமானாலும் புகார் செய்' என, அவர் கூறுவது பதிவாகி உள்ளது. இந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து, அசோக் சிங் மீது வழக்கு பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.
16 minutes ago
4 hour(s) ago | 2