உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துவாரகையில் கடலில் நீராடி பிரதமர் மோடி வழிபாடு

துவாரகையில் கடலில் நீராடி பிரதமர் மோடி வழிபாடு

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் துவாரகையில் பகவான் கிருஷ்ணர் கால நகரம் கடலில் பிரதமர் மோடி, நீருக்குள் மூழ்கி பிரார்த்தனையில் ஈடுபட்டார். குஜராத்தில் அமைந்துள்ள நாட்டின் மிக நீளமான 'சுதர்ஷன் சேது' கேபிள் பாலத்தை ரிப்பன் வெட்டி பிரதமர் மோடி திறந்து வைத்தார். பாலத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:* ஓகா மற்றும் பெய்ட் துவாரகா தீவை இணைக்கும் 'சுதர்ஷன் சேது' பாலம் ரூ.979 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q0ups4my&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* 2.3 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்திற்கு 2017 அக்டோபர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.* இந்த நான்கு வழிச்சாலை பாலம் 27.20 மீட்டர் அகலம் உள்ளது. பாலத்தில் இரண்டு பக்கமும் 2.50 மீட்டர் அகல நடை பாதைகள் உள்ளன.* சுதர்சன் சேது பாலம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பாலத்தின் நடைபாதை பகவத் கீதையின் வசனங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்கள் உள்ளன.* நடைபாதையின் மேல் பகுதியில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. * இந்த பாலம், புகழ்பெற்ற துவாரகாதீசர் கோயிலுக்கு வருகை தரும் மக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மகிழ்ச்சி அடைகிறேன்

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி, '' நாட்டின் மிக நீளமான 'சுதர்ஷன் சேது' கேபிள் பாலத்தை இன்று திறந்து வைத்ததால், மகிழ்ச்சி அடைகிறேன். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டின் சான்று'' என பதிவிட்டுள்ளார்.

கடலுக்குள் மூழ்கி பிரார்த்தித்த மோடி

குஜராத் மாநிலம் துவாரகையில் பகவான் கிருஷ்ணர் கால நகரம் கடலில் மூழ்கியுள்ளது. அங்கு பிரதமர் மோடி, நீருக்குள் மூழ்கி பிரார்த்தனையில் ஈடுபட்டார். இது எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவமாக இருந்தது. ஆன்மிக மகத்துவம் மற்றும் காலமற்ற பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வழிபாடு

முன்னதாக, புகழ்பெற்ற துவாரகாதீசர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்தார்.

இதில் தான் காங்., கட்சியின் கவனம்: மோடி

குஜராத் மாநிலம் துவாரகாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடலில் ஆழமாகச் சென்று, பண்டைய துவாரகா நகரை தரிசனம் செய்தேன். துவாரகா நகரம் பற்றி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நிறைய எழுதியுள்ளனர். நீருக்கடியில் மறைந்துள்ளது. நான் கடலுக்குள் சென்றபோது நான் தெய்வீகத்தை அனுபவித்தேன். ஒரு மயில் தோகை எடுத்து கிருஷ்ணரின் பாதத்தில் வைத்தேன். 'சுதர்சன் சேது' கேபிள் பாலத்தில் அற்புதங்கள் நிறைந்துள்ளன. இது குறித்து பொறியியல் மாணவர்கள் படிக்க வேண்டும். இது இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் ஆகும். இந்த பாலத்திற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டி இன்று திறந்து வைத்தேன். காங்கிரஸ் கட்சியின் கவனம் குடும்பத்தை கவனிப்பது மட்டும் தான். பல ஆண்டுகளாக நாட்டை ஆண்டவர்களுக்கு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டது. அதனால் தான் இந்தியாவின் பொருளாதாரம் 11வது இடத்திற்கு சென்றது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

5 எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறப்பு

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த பொது நிகழ்ச்சியில், சுகாதாரம், சாலை, ரயில்வே, எரிசக்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கிய ரூ.48,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத் மாநிலம் ராஜ்கோட், பஞ்சாப் மாநிலம் பதிண்டா, ரேபரேலி (உத்தரப்பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்கம்) மற்றும் மங்களகிரி (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களை (எய்ம்ஸ்) நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ