உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவருக்கு கோர்ட் ஜாமின்

மணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவருக்கு கோர்ட் ஜாமின்

புதுடில்லி:மணமான பெண் ஒருவருடன் உறவு வைத்திருந்த ஆணுக்கு, முன் ஜாமின் வழங்கி, டில்லி கோர்ட் உத்தரவிட்டது. டில்லி நீதிமன்றத்தின் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி விஷால் சிங் முன், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரரான ஆண், பல முறை அந்த பெண்ணுடன் உறவு வைத்திருந்து பிரிந்து விட்டார் என கூறி, வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமின் வழங்கி, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் மனுதாரருக்கு முன்ஜாமின் வழங்கி, இந்த கோர்ட் உத்தரவிடுகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை, இது கட்டாய உறவு அல்ல. அந்த பெண்ணுக்கு, 14 வயதில் மகள் இருக்கிறார்; அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்தே அந்த பெண்ணுடன் இந்த ஆண் தொடர்பு வைத்திருக்கிறார். இப்போது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் மீது அந்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் அந்த ஆணை கைது செய்யக் கூடாது; கைது செய்யப்பட்டால், உடனடியாக அவர் ஜாமினில் விடுவிக்கப்பட வேண்டும். 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் செலுத்தி ஜாமின் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை