உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவிலுக்குள் செல்ல மறுத்த ராணுவ அதிகாரியின் நடத்தை ஒழுங்கீனமானது: உச்ச நீதிமன்றம்

கோவிலுக்குள் செல்ல மறுத்த ராணுவ அதிகாரியின் நடத்தை ஒழுங்கீனமானது: உச்ச நீதிமன்றம்

புதுடில்லி: 'ஹிந்து கோவிலுக்குள் நுழைய மறுத்த ராணுவ அதிகாரியின் நடத்தை மிக ஒழுங்கீனமானது' என, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் அவரை பணியில் இருந்து நீக்கியது சரியான நடவடிக்கையே என கூறி, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உறுதி செய்தது. இந்திய ராணுவத்தின் குதிரைப் படையில் கடந்த 2017ம் ஆண்டு சாமுவேல் கமலேசன் என்பவர் இணைந்தார். அணிவகுப்பு லெப்டினென்ட் அதிகாரி என்பதால், சீக்கியர்கள், ஜாட் மற்றும் ராஜ்புத் வீரர்கள் அடங்கிய மூன்று படைக் குழுக்களை வழிநடத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த படைக் குழுக்களுக்கு வாரந்தோறும் அவரவர் மதப்படி வழிபாடு நடத்துவதற்கான அணிவகுப்பு நடக்கும். ராணுவ விதிப்படி இதற்கு லெப்டினென்ட் அதிகாரியான சாமுவேல் கமலேசனே தலைமை ஏற்க வேண்டும். இவர் கிறிஸ்துவர் என்பதால், வாரந்தோறும் கோவில் மற்றும் குருத்வாராவில் நடக்கும் வழிபாட்டு நிகழ்ச்சியை புறக்கணித்து வந்தார். குறிப்பாக ஆரத்தி, பூஜை உள்ளிட்ட முக்கிய வழிபாடுகள் நடக்கும் சமயங்களில் கோவிலுக்குள் செல்வதில்லை. இது ராணுவ உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல் லப்பட்ட நிலையில், கோவிலுக்கு வெளியே காத்திருக்க தான் தயார் என்றும், ஆரத்தி, அர்ச்சனை போன்ற முக்கி ய பூஜை சடங்குகளில் பங்கேற்க விரும்பவில்லை எனவும் கூறியிருந்தார். மேலும், தான் சார்ந்த கிறிஸ்துவ மதம் இதை ஏற்காது எனவும் விளக்கம் அளித்திருந்தார். ராணுவத்தில் மதரீதியான பிளவுகளுக்கு இடமில்லை என்பதால், சாமுவேல் கமலேசனின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிகாரிகள், கட்டளையை பின்பற்ற தவறிய அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். பணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களும் நிறுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு எதிராக சாமுவேல் கமலேசன் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'பணியாற்றும் ராணுவ வளாகத்தில் கோவில், குருத்வாரா மட்டுமே இருக்கிறது. சர்ச் இல்லை. தவிர, படை வீரர்களுடன் கோவில் வரை சென்றேன். ஆனால், கோவிலுக்குள் நடக்கும் வழிபாடு, பூஜை உள்ளிட்ட சடங்குகளில் மட்டுமே பங்கேற்பதில்லை. அதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றே கோரியிருந்தேன்' என குறிப்பிட்டிருந்தார். தள்ளுபடி இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது விளக்கத்தை ஏற்க மறுத்தது. 'ராணுவ அதிகாரியாக இருப்பவர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும். 'மதத்திற்கு முக்கியத்துவம் தராமல், அணிந்திருக்கும் ராணுவ சீருடைக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும். அவரது நடத்தை இந்திய ராணுவத்தின் அனைத்து மத விதிகளுக்கு எதிராக உள்ளது. எனவே, பணி நீக்கம் செய்தது சரி தான்,' என கூறி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சாமுவேல் கமலேசன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'ராணுவ அதிகாரியின் இந்த நடத்தை மிக ஒழுங்கீனமானது' என கண்டித்தனர். 'இதற் காக அவர் பணி நீக்கப்பட்டது சரியே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்கிறோம்' எனகூறி, அவரது மனுவை தள்ளுபடி செய் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி