உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் அமலாக்கத்துறைக்கு கோர்ட் கேள்வி

சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் அமலாக்கத்துறைக்கு கோர்ட் கேள்வி

புதுடில்லி: வரதட்சணை கொடுமை சட்டத்தை போல, சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தையும் அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பல்வேறு நீதிமன்றங்களும் அமலாக்கத் துறையின் செயல்பாடுகளை காட்டமாக விமர்சித்து வருகிகின்றன.

ரூ.2,000 கோடி ஊழல்

ஹரியானா முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவரிடம், 15 மணி நேரம் விசாரணை நடத்தியதை 'மனிதாபிமானமற்ற செயல்' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.மும்பை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு உயர் நீதிமன்றங்களும், சட்டத்தை தன் கையில் அமலாக்கத் துறை எடுத்துக் கொள்வதாக விமர்சித்துள்ளன. இந்நிலையில், சத்தீஸ்கரில் மதுபான கொள்கையில், 2,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் கலால் துறை அதிகாரி அருண் பதி திரிபாதி, ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அருண் பதிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், அமலாக்கத் துறைக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் கூறியதாவது:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் என்பது வரதட்சணை கொடுமை சட்டத்தைப்போல அமலாக்கத் துறையால் பயன்படுத்தப்படுகிறதா? முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சம்மன் அனுப்பி, விரைவாக கைது செய்த வேகத்தைப் போன்று, பயங்கரவாதம், கொடூர குற்றங்களில் கூட நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.

விசாரணை

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான ஒருவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியாது. இந்த வழக்கில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை.அமலாக்கத் துறை அதிகாரிகள் நேரில் வந்து, விளக்கம் அளிக்க வேண்டும். குற்றங்களில் தண்டனை விகிதத்தை அதிகரிக்க, அறிவியல்பூர்வமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

GMM
பிப் 14, 2025 11:14

முன்னாள் கலால் கெஜெட் அதிகாரிக்கு அமலாக்க துறை சராசரி குற்றவாளி போல் நடத்த முடியாது. அதிகாரிக்கு பின்னால் அரசியல் வாதிகள் நிழலாக இருப்பர். அறிவியலில் இவர்கள் தெரிய மாட்டார்கள். அது போல் நீதிமன்ற வாதி, பிரதிவாத மனுவில் கல்வி தகுதி, அரசு பதவி , சமூக பொறுப்பை வக்கீல்கள் குறிப்பிடுவது இல்லை. இதன் மூலம் நீதிமன்றம் ஒரு லேமன் மற்றும் பொறுப்பான நபரை சமமாக நடத்தும் நிலை ஏற்படும். நீதிமன்றம் முதலில் கேள்வி, தணிக்கைக்கு உட்பட வேண்டும். அரசியல் சாசன மொத்த அதிகாரம் நீதிமன்றத்திற்கு தான் என்று தவறான கருத்தை உருவாக்கிவிட்டனர். இது தவறு.


Shekar
பிப் 14, 2025 09:47

கொள்ளை அடிச்சவன், கொலை செஞ்சவன், கற்பழிச்சவன், மணல் கடத்துறவன், சிலை கடத்துறவன், குண்டு வைக்கிறவன் இப்படி எல்லாத்தையும் வெளிய விடுங்க எஜமான். புடிக்கிற போலீசை ஜெயில்ல போடுங்க எஜமான்.


Barakat Ali
பிப் 14, 2025 09:43

கொலிஜியம் விரும்புறதை மட்டுமே செஞ்சு தேசவிரோதிகளுக்கும், இடதுசாரிகளுக்கு உதவணும்... இதுதான் கோர்ட்டுகள் விரும்புவது .....


அப்பாவி
பிப் 14, 2025 08:45

போகப் போக பழைய பண்டமாற்று முறைக்கே போயிடலாம் போலிருக்கு


Karthik
பிப் 14, 2025 08:23

வெளங்கிடும்..


Minimole P C
பிப் 14, 2025 07:57

Courts shall the present situation of the country and make observations and pass strictures according to the present needs of the country.Many politicians loot public money in thousands of crores and no politicians and govt. officials suffer due to poverty etc. All are wealthy and started threatening public because of their money power. Acrually people are afraid of police but that police are afraid of politicians. The courts shall be deal them properly because of the their special status enjoy in the soceity.


VENKATASUBRAMANIAN
பிப் 14, 2025 07:28

நீதிமன்றங்கள் என்ன சொல்ல வருகின்றன. கொள்ளை அடித்த வரை விட்டு விட வேண்டுமா. இப்படி விசாரிக்கும் போதே கல்லுளி மங்கன் போல் பேச மறுக்கிறார்கள். அப்புறம் எப்படி விசாரிக்க வேண்டும். குற்றவியல் விசாரணை வேறு அதை விசாரிக்க சொல்லுவதில் தப்பே இல்லை.


Dharmavaan
பிப் 14, 2025 06:52

நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க காரணமே இந்த கோர்ட்டுகளில் குற்றவாளி மீதான கரிசனம் கேவலம்


Kasimani Baskaran
பிப் 14, 2025 06:28

அதானே ... எண்களைப்போல வேகமாக வேலை செய்ய வேண்டும். அதிவேகமாக கைது செய்தால் நாங்கள் எப்படி உயிர் வாழ்வது...


சமீபத்திய செய்தி