உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோனியா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு

சோனியா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்னரே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட டில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.இது தொடர்பாக விகாஸ் திரிபாதி என்பவர் டில்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா கடந்த 1983-ம் ஆண்டு ஏப்ரலில் இந்​திய குடியுரிமை பெற்றார். ஆனால், புதுடில்லி சட்​டசபை தொகு​தி வாக்​காளர் பட்டியலில் அவரது பெயர் 1980-ம் ஆண்டே இடம்​பெற்​றுள்​ளது. போலி ஆவணங்​கள் மூல​மாக அவரது பெயர் வாக்​காளர் பட்​டியலில் சேர்க்​கப்​பட்டு இருக்​கலாம் என்​ப​தால் இதுதொடர்​பாக சோனியா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசா​ரிக்க போலீசாருக்கு உத்​தர​விட வேண்​டும்.இவ்​வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சோனியா மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட மறுத்துவிட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
செப் 11, 2025 19:08

நீதிமன்றங்களும் தப்பு செய்யுமே


saravan
செப் 11, 2025 18:24

ஏன் இத்தாலி கண்களுக்கு இந்தியாவில் குற்றவியல் சலுகை உண்டா


முக்கிய வீடியோ