உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டத்தை சீர்குலைக்க வேண்டாம்; உ.பி., போலீசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

சட்டத்தை சீர்குலைக்க வேண்டாம்; உ.பி., போலீசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'சாதாரண சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக பதிவு செய்வதா?' என உ.பி., அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இது சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் செயல் என கண்டித்தது. உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு நிலம் தொடர்பான பிரச்னை ஒன்றை சிவில் வழக்காக பதிவு செய்வதற்கு பதில், கிரிமினல் வழக்காக போலீசார் பதிவு செய்தனர். இதையடுத்து, ஷரிப் அகமது என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பரில் தீர்ப்புஅளித்தது. அதில், 'இதுபோன்று கிரிமினல் வழக்குப்பதிவு செய்து, சாதாரண மக்களை அவதிக்கு உள்ளாக்குவது தவிர்க்கப்பட வேண்டும். இது தொடர்பாக, போலீசாருக்கு போதிய அறிவுரைகளை டி.ஜி.பி., வழங்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் தன் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது தொடர்பாக, நொய்டாவைச் சேர்ந்த தீபு சிங், தீபக் சிங் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கை உ.பி., போலீசார் பதிவு செய்தனர். அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்ததால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், விஸ்வநாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உ.பி., போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சிவில் வழக்காக பதிவு செய்தால், வழக்கு முடிவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். விரைவாக முடித்து தண்டனை பெற்றுத் தருவதற்காகவே கிரிமினல் வழக்காக பதிவு செய்யப்படுகிறது' என்றார். இதையடுத்து, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டதாவது: உ.பி.,யில் என்ன நடக்கிறது? ஒவ்வொரு நாளும் சிவில் வழக்குகள் எல்லாம் கிரிமினல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன; இது மிகவும் அபத்தமானது. சட்டத்தின் ஆட்சியை முற்றிலுமாக சீர்குலைக்கும் செயல். இது மிகவும் தவறு. சிவில் வழக்குகளுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதால், நீங்களே எப்.ஐ.ஆர்., பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கையை துவங்குவீர்களா; உ.பி.,யில் தினமும் விசித்திரமாக நடக்கிறது. பணத்தை திருப்பித் தராமல் இருப்பது கிரிமினல் குற்றமல்ல. இன்னும் சொல்லப்போனால், இது வழக்கே அல்ல. ஏற்கனவே, இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றவில்லை. இதற்காக, கவுதம புத்த நகர் மாவட்ட விசாரணை அதிகாரியை கூண்டில் ஏற்றி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை துவங்கலாம். உ.பி., போலீஸ் டி.ஜி.பி., பிரசாந்த் குமார், நொய்டா போலீஸ் அதிகாரி இருவரும் இரண்டு வாரத்தில் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும். நொய்டா நீதிமன்றத்தில் நடக்கும் கிரிமினல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும், பணம் இல்லாமல் காசோலை திரும்பியது தொடர்பாக வழக்கு தொடரலாம். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ram
ஏப் 08, 2025 10:37

இங்கு கான்விக்ட் ஆனா மந்திரிக்கு பதவி பிரமாணம் செய்வதற்கு governeruku கால கெடு கொடுத்தது இந்த உச்ச நீதிமன்றம் இப்போது கண்டனம் வேறு. கொலிஜியம் முறையை ஒழித்தால் மட்டும் இந்த நீதி மன்றங்கள் ஒழுங்காக இருக்கும்.


Mecca Shivan
ஏப் 08, 2025 10:18

சொத்தை இழப்பவனுக்கும் பணத்தை இழப்பவனுக்கும்தான் அதன் வலி தெரியும். மாத மாத சம்பளம் வருபவர்களுக்கு என்ன? செக் பவுன்ஸ் வழக்கை சிவில் வழக்காக வைத்திருக்கும் கேடுகெட்ட மத்திய இன்றைய முந்தைய அரசுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் ..


அப்பாவி
ஏப் 08, 2025 09:50

டில்லிலேருந்து அலஹாபாத் வந்திருக்கும் பழைய புது நீதிபதி எப்பிடி இருக்கார்?


Dharmavaan
ஏப் 08, 2025 09:42

நீதி மன்ற தாமதத்தை யாரும் கேட்க கூடாதா என்ன அராஜகம் இது.மக்களுக்கு நீதி சீக்கிரம் கிடைக்க வேண்டும் ஏமாற்றுவதும் கிருமிகள் குற்றமே


Thetamilan
ஏப் 08, 2025 08:58

அரசியல் சட்டத்தையோ, நீதிமன்றங்களையோ இந்து மதவாத அரசுகள் ஒருபோதும் மதித்ததில்லை. உலகமே இவர்கள் கையில் என்ற அகங்காரத்துடன் உள்ளார்கள். இப்படி ஒரு அகங்காரம் தீவிரவாத பயங்கரவாத இயக்கங்களிடம் மட்டும்தான் இருக்கும். தீவிரவாதத்தி ஒழித்துவிட்டோம் என்று கூறுபவர்கள் அரசியல் சட்டத்தையும் அரசையும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் நிறைந்த ஒன்றாக மாற்றிவிட்டார்கள். தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்றால் என்ன என்பதை அரசியல் சட்டம் சரியாக வரையறுக்கவில்லையோ


venugopal s
ஏப் 08, 2025 08:56

உத்தரப் பிரதேச பாஜக அரசுக்கு புத்தி வராது! திமிர் அதிகம்!


Nandakumar Naidu.
ஏப் 08, 2025 08:39

சட்டத்தை சீர்குலைக்க உதவுவதே உச்ச நீதிமன்றம் தான். இதுலே அட்வைஸ் வேற.


Anantharaman
ஏப் 08, 2025 07:41

சிவில் வழக்குகளை ஒரேயடியாக தொலைந்து முழங்கினார் மக்களுக்கு நியாயம் சில ஆண்டுகளாகிறது கிடைக்கும். திருட்டுத்தனமாக வாய்தா கேட்கும் வக்கீல்களும் ஓட்டையை சட்டங்களும் உள்ளவரை நீதி கிடைக்காது. நீதிபதிகளும் மறைபடாம் அணிந்த குதிரை போல கண்மூடித்தனமாக நடந்து கொள்வது குறையும்.


GMM
ஏப் 08, 2025 07:12

சட்டத்தின் ஆட்சி என்றால், நில தாவாவை கலெக்டர் விசாரித்த பின் தான் மாவட்ட நீதிமன்றம். கலெக்டர் வேலை மந்திரி பின்னால் சுற்றுவது கிடையாது. அப்படி ஒருவர் வழக்கு தொடர்ந்தால் பதிவு செய்து கலெக்டர் விசாரணைக்கு அனுப்ப வேண்டும். காசோலை விவகாரத்தில் அரசு வக்கீல் விளக்கம் தவறு. நீதிபதி வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனை வழங்குவேன் என்று அரசு அதிகாரியை மிரட்டுவது மிக தவறு. அரசு அதிகாரி ஒன்றும் கிரிமினல் அல்ல. நீதிபதி போல் அவர்களுக்கும் அதிகாரம் உண்டு. உத்தரவு பிறப்பித்து அமுல் படுத்த முடியும். கோபம் பண மூட்டையின் விளைவு. ?


Va.sri.nrusimaan Srinivasan
ஏப் 08, 2025 07:10

I was so far thinking d judiciaries r CORRUPTED one


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை