உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

புதுடில்லி: தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.ஜக்தீப் தன்கர் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 ம் தேதி நடக்க உள்ளது. இதில் தேஜ கூட்டணி வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oqsofxo9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று( ஆகஸ்ட் 18) டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.https://x.com/CPRGuv/status/1957377763863589061 பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தேன். தேஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். அவரது நீண்ட கால பொது சேவை மற்றும் பல்வேறு துறைகளில் அவரின் அனுபவம் நமது நாட்டை வளப்படுத்தும். அவர் எப்போதும் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் தொடர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.https://x.com/narramodi/status/1957377093190156797

ஜெகன்மோகன் ஆதரவு

இந்நிலையில், தேஜ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramesh Sargam
ஆக 18, 2025 20:45

இப்பவே திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.


venugopal s
ஆக 18, 2025 20:04

அதிகாரம் உள்ள பதவிகள் வட இந்தியர்களுக்கு, டம்மி பதவிகள் தென் இந்தியர்களுக்கு என்பது தானே பாஜகவின் கொள்கை!


guna
ஆக 18, 2025 20:23

எதுக்கு வீணா புலம்புற


திகழ்ஓவியன்
ஆக 18, 2025 19:44

பாவம் TN இல் ஒருத்தர் சாதாரண மக்கள் ஆதரவு இல்லை , முருகன் மந்திரி என்ன செய்தார் தமிழ்நாட்டுக்கு , இவர் தமிழிசை , நிதி அமைச்சர் இவ்வளவு பேர் என்ன செய்தார்கள் தமிழ்நாட்டுக்கு , ஒரிடிசாவின் கோயில் சாவி தமிழ் நாட்டில் உள்ளது , தமிழன் திருடன் என்று சொன்ன போது பொங்க வில்லையே அப்புறம் எப்படி வோட்டு


SUBBU,MADURAI
ஆக 18, 2025 17:14

தமிழக பாஜகவின் மூத்த தலைவர் H.ராஜா புதிய கவர்னராகிறார்.


mahalingamssva
ஆக 18, 2025 16:11

இவர்களின் சந்திப்பு போட்டோ பெருமை அளிப்பதாக உள்ளது. சிறந்த ஆளுமைகள், வாழ்த்துகள்


Priyan Vadanad
ஆக 18, 2025 15:54

சி பி ராதாகிருஷ்ணன் தேர்விலும் அரசியல்தனம்தான் தெரிகிறது. இந்திய வரலாற்றிலே சிறப்பு பெற்ற கவர்னராக இருக்கு நமது தமிழ்நாட்டு கவர்னர் திருவாளர் ரவியார் இருக்கும்போது எப்படி தமிழர் திரு ராதாகிருஷ்ணன் அவர்களை ஏன் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட பாவாக்கா நிறுத்த வேண்டும்? தமிழரை திமுக ஆதரிக்கவில்லை என்று காட்டியோ அல்லது ஆதரிக்கிறது என்று காட்டியோ, எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பமும் பிரிவும் ஏற்படுத்தும் சூழ்ச்சி என்பது புரிகிறது.


தெய்வேந்திரன்,மண்டபம்
ஆக 18, 2025 17:47

உனக்கேன் அந்த கவலை? அப்பத்துக்கு மதம் மாறிய கும்பல்களுக்கு பாஜக பேரை கேட்டாலே ச்சும்மா அல்லு விடுது...


Matt P
ஆக 18, 2025 19:30

கட்சி அடிமை மட்ட தொண்டரே- பிரியன் வடநாடே இப்படி குழம்பி போயிருக்கும் போது, கட்சி தலைமை எவ்வளவு கலக்கத்தில் இருக்கும் என்பதை உணர முடிகிறது.


sundarsvpr
ஆக 18, 2025 15:53

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்புஇல்லை. மீண்டும் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் என்ற தவறான எண்ணத்தில் ஊடகங்கள் உள்ளன. இதனை ஸ்டாலின் அறிந்தும் மறைவில் இதனை முறியடிக்க முயல்கிறார். சி பி ராதாகிருஷ்ணன் தேர்வானதும் ஸ்டாலின் அணுகுமுறை மத்திய அரசுடன் ஸுமுகமாய் இருக்கும் ம்


Tiruchanur
ஆக 18, 2025 15:53

CPR க்கு ஹிந்தி தெரியாது. எப்படிதான் ராஜ்ய ஸபா வை நடத்த போகிறாரோ


Nagendran,Erode
ஆக 18, 2025 17:44

அவருக்கு ஹிந்தி தெரியாதுன்னு உனக்கு தெரியுமா? போவியா..


Matt P
ஆக 18, 2025 19:33

இந்த காலத்திலும் இப்படியா? எந்த இந்திய மொழியிலும் பேசலாம். இது இந்தி நாடு அல்ல. இந்திய நாடு. இங்கிலீஷிலும் பேசலாம்.


புதிய வீடியோ