உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் மார்க்., கம்யூ., பிரசாரத்தால் பா.ஜ.,வுக்கு பலன்; முஸ்லிம் லீக் சொல்கிறது

கேரளாவில் மார்க்., கம்யூ., பிரசாரத்தால் பா.ஜ.,வுக்கு பலன்; முஸ்லிம் லீக் சொல்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோழிக்கோடு: சமீபத்திய லோக்சபா தேர்தலில் மார்க்.,கம்யூ கட்சியின் முஸ்லிம் விரோத போக்கும், பிரசாரமும் பா.ஜ.,வின் வெற்றிக்கு காரணமாக அமைந்து விட்டது என கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சாதிக் அலி ஷஹாப் தங்கல் கூறியுள்ளார்.இவரது கட்சி பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள அவரது கட்டுரையில் மேலும் கூறியிருப்பதாவது: கேரளாவில் பா.ஜ., ஓட்டுச்சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து அனைத்து தரப்பினரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். திருச்சூரில் பா.ஜ., தனது கணக்கை துவக்கி இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=norq4g6g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சிபிஐஎம் இரட்டை வேடம்

இதற்கெல்லாம் காரணம் ஆளும் மார்க்.,கம்யூ கட்சியின் பிரசாரம் தான். முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில பிரசார யுக்தி நடந்தது. இவர்கள் இல்லை என்றால் முஸ்லிம்கள் மக்கள் இரண்டாம் தரமாக்கப்படுவார்கள் என்பது நகைச்சுவையாக உள்ளது. சிபிஐஎம் இரட்டை வேடம் பா.ஜ., வெற்றிக்கு அடிகோலுகிறது. முத்தலாக் தடை சட்டம், பொது சிவில் சட்டம், லவ்ஜிகாத் போன்றவை முதன்முதலில் இவர்களால் தான் வலியுறுத்தப்பட்டது. கேரளாவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை குறைத்தார்கள். இது போன்ற செயல்கள் பா.ஜ.,வுக்கு வெற்றியை தருகிறது. கம்யூ., மதச்சாய அரசியல் செய்கிறது. இவ்வாறு சாதிக் அலி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sukumar Talpady
ஜூன் 16, 2024 17:51

நீங்கள்தான் ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி VAITHTHIRUNTHEERGAL.


ஆரூர் ரங்
ஜூன் 16, 2024 13:52

இஸ்லாமியர்களிடையேயும் அறுபதுக்கும் மேற்பட்ட சாதிகள் இருப்பதாக சச்சார் கமிட்டி கூறியுள்ளது. எந்த கட்சியும் இந்த சாதிகளை ஒழிக்க போராட்டம் நடத்தியதில்லை. பல இடங்களில் மாற்றுப் பிரிவு சம்பந்தத்திற்கு ஜமாஅத்துக்கள் அனுமதியளிக்க மறுக்கின்றன. மறைமுக தீண்டாமையும் உண்டாம். முஸ்லிம் லீக், கம்யூனிஸ்டு இரண்டுமே நாட்டுக்கு ஆபத்தானவை.


ganapathy
ஜூன் 16, 2024 13:15

பாரம்பரியமாக இந்துக்கள் அதிகம் இருந்த பகுதிகள் இன்று குறைந்துள்ளனவெனில் அதற்கான காரணம் மதஜிஹாத் லவ்ஜிஹாத் நிலஜிஹாத் போன்றவையே.


r ravichandran
ஜூன் 16, 2024 11:45

பெயரில் கூட மதத்தை வைத்து இருக்கும் கட்சி தலைவர் மத சார்பின்மை குறித்து பேசுவது வேடிக்கை.


Duruvesan
ஜூன் 16, 2024 11:31

முத்தலாக் சொல்லி உன்னை போல பெண்களை அடிமையாய் நடத்தும் கூட்டத்தை பினராயி அல்ல எந்த மனிதனுக்கும் பிடிக்காது


M Ramachandran
ஜூன் 16, 2024 11:27

நாட்டு பற்று ?????


RAJ
ஜூன் 16, 2024 11:20

ஆட்டம் அடக்கப்படும்


Svs Yaadum oore
ஜூன் 16, 2024 11:19

சில நாட்களாக கேரள காங்கிரஸ் பதிவு செய்யும் கருத்து செய்திகள் தரமற்ற வகையில் உள்ளது .. .இது திருத்திக்கொள்ள பட வேண்டும் ...இல்லையென்றால் அதே போல் தக்க பதிலடி கொடுக்க படும் ..


Svs Yaadum oore
ஜூன் 16, 2024 11:16

மத சார்பின்மை என்று சொல்லி கொண்டு மதத்தின் பெயரால் உள்ள கட்சிகளுடன் விடியல் கூட்டணி …..அந்த சிறுபான்மை அவர்களுக்கு சம்பந்தமே இல்லை என்று சொல்லும் ராமசாமி பற்றி பேச்சு …. சிறுபான்மை ராமசாமி பற்றி பேச காரணம் ஹிந்து மதத்தை இழிவுபடுத்த …..சிறுபான்மைக்கு ராமசாமி ரொம்ப முக்கியம் என்றால் ராமசாமி படத்தை அவர்க வீட்டில் தொங்க விடட்டுமே ...அடுத்தவன் ஊருக்கு ராமசாமி பெயர் வைப்பது ….சிறுபான்மை ஊருக்கு ராமசாமி நகர் என்று பெயர் வைத்துக்கொள்ளட்டும் ...


Svs Yaadum oore
ஜூன் 16, 2024 10:56

கம்யூனிஸ்ட்கள் மத சாய அரசியல் செய்கிறார்களாம் ….தமிழ் நாட்டில் ஜாதி அரசியல் செய்கிறார்கள் ….திருநெல்வேலியில் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடல் ….காரணம் ஜாதி பிரச்சனை …..ஜாதி தகறாரு திருமணம் என்றால் யார் வேண்டுமானாலும் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை அணுகலாமாம் ….இவர்கள் கட்சி நடத்துகிறார்களா அல்லது ஜோடி பொருத்தம் பார்க்கும் வேலை செய்கிறார்களா ??….இதே போல் ஜாதி பிரச்சனை என்றால் விடியல் அலுவலகத்தையும் அணுகலாமா ??….


மேலும் செய்திகள்