உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலை தடுமாறிய ஹெலிகாப்டர்: உயிர் தப்பிய அமித்ஷா: வீடியோ வைரல்

நிலை தடுமாறிய ஹெலிகாப்டர்: உயிர் தப்பிய அமித்ஷா: வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் சென்ற ஹெலிகாப்டர் புறப்படும்போது சற்று நிலை தடுமாறி காற்றில் இழுத்துச் செல்லப்பட்டது. சுதாரித்துக்கொண்ட பைலட் சாதுரியமாக இயக்கியதால், அமித்ஷா உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.7 கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்ட தேர்தல் மே 7ல் நடக்க உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ls2eychw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில் பீஹார் மாநிலம் பெகுசாராய் பகுதியில் பிரசாரம் முடித்து மத்திய அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டரில் கிளம்பினார். அப்போது சற்று மேல் எழும்பிய ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து சிறிது தூரம் காற்றில் இழுத்து செல்லப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சில வினாடிகளில் ஹெலிகாப்டரை கட்டுக்குள் கொண்டுவந்த பைலட் சிறப்பாக செயல்பட்டு, மேலே பறக்கும் வகையில் இயக்கினார். பின்னர் ஹெலிகாப்டர் அங்கிருந்து பறந்து சென்றது.

விளக்கம்

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், ‛‛உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணித்த ஹெலிகாப்டரில் எந்த பிரச்னையும் இல்லை. அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகவில்லை'' என விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Anantharaman Srinivasan
ஏப் 30, 2024 00:07

காற்றுக்கேது வேலி உயிருள்ள ஜீவனாயிருந்தால் ED IT யை விட்டு மிரட்டலாம்


Mario
ஏப் 29, 2024 21:25

Election Drama


Sankaranarayanan
ஏப் 29, 2024 20:17

I am regularly travelling in helicopters, this maneuver is very normal for pilot to get proper lift and move forward


Ramesh Sargam
ஏப் 29, 2024 19:45

மனிதனே பல நேரங்களில் தடுமாறும்போது, மனிதன் தயாரித்த, மனிதம் இயக்கும் ஹெலிகாப்டர் தடுமாறுவதில் வியப்பேதும் இல்லை


Priyan Vadanad
ஏப் 29, 2024 19:30

நிலை தடுமாறிய ஹெலிகாப்டர்: உயிர் தப்பிய அமித்ஷா: இந்த காற்றுக்கு அமித்ஷா மீது ஏன் இத்தனை வன்மம்? காற்றுக்கு அவர் என்ன தீங்கு செய்தார்? ஒரு நல்லவர்மீது இப்படி ஒரு சதித்திட்டம் காற்று செய்யலாமா? காற்றின்மீது வழக்கு போட்டு CBI விசாரணை வைத்து காற்றை பலூனுக்குள் அடைத்துவிட இங்கு பதிவிடும் அனுதாபிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்


தீரன்
ஏப் 29, 2024 19:11

அரசு செலவில் பயணம். அமைச்சரோல்யோ...


MADHAVAN
ஏப் 29, 2024 19:01

மம்தா கீழ விழுந்தப்ப கருத்துப்போட்டவர்கள் இங்க வந்து கருத்துப்போடவும்,


Priyan Vadanad
ஏப் 29, 2024 19:24

கருத்து போட்டுட்டேன்


நல்லவன்
ஏப் 29, 2024 17:35

முடிவு வந்ததும், சினிமாவுல வந்தாருன்னா சூப்பர்ஸ்டார்ரா ஒரே படத்துல ஆகிடுவாரு உலகமாக விளம்பரம்


Rakkappan
ஏப் 29, 2024 17:34

Its normal take up


srinivasan Ramesh
ஏப் 29, 2024 17:16

jai sriram


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி