உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாஜவில் இணைகிறாரா கிரிக்கெட் வீரர் முகமது ஷமி? நிதின் நபினுடன் சந்திப்பு

பாஜவில் இணைகிறாரா கிரிக்கெட் வீரர் முகமது ஷமி? நிதின் நபினுடன் சந்திப்பு

புதுடில்லி: 36 வயதான இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கடந்த நவம்பர் 6ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த சூழலில், டில்லியில் பாஜ தேசியத் தலைவர் நிதின் நபினை முகமது ஷமி நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது பாஜ சிறுபான்மையினர் அணித் தலைவர் குன்வர் பாசித் அலியும் உடனிருந்தார்.இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பாஜவில் இணைந்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதால், ஷமியின் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அண்மையில் பாஜவில் இணைந்த சஹால், அக்கட்சியின் ஓபிசி அணியின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை