உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவில் தஞ்சமடையும் கிரிமினல்கள்: லோக்சபாவில் மத்திய அரசு தகவல்

அமெரிக்காவில் தஞ்சமடையும் கிரிமினல்கள்: லோக்சபாவில் மத்திய அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் மற்றும் கிரிமினல்களில் மூன்றில் ஒருவர், அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக அந்நாடு மாறி உள்ளது எனவும் லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இந்தியா - அமெரிக்கா இடையே குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பான ஒப்பந்தம் 1997ல் கையெழுத்து ஆனது.இந்நிலையில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகள் தொடர்பான கேள்விக்கு லோக்சபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: இந்தியாவால் தேடப்படும் கிரிமினல்கள் மற்றும் பயங்கரவாதிகளில் 3ல் ஒருவர் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக அந்நாடு மாறி உள்ளது.அவர்களை நாடு கடத்துவது தொடர்பாக இந்திய விசாரணை அமைப்புகள் அளித்துள்ள 178 விண்ணப்பங்களில் 65 இன்னும் அமெரிக்க அரசின் பரிசீலனையில் உள்ளன. இது வெளியுறவு அமைச்சகத்தின் ஆவணங்களில் உள்ளது. 2002 முதல் 2018ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 11 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டு உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 23 கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டன.கிரிமினல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்களை நாடு கடத்துவது தொடர்பாக மத்திய அரசு தூதரக ரீதியில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை நாடு கடத்துவது தொடர்பாக 48 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம செய்துள்ளது. 12 நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட உள்ளது. குற்றவாளிகள் நீதியில் இருந்து தப்பித்து விடாத வகையில், இன்னும் பல நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட உள்ளது.அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலானோர் கொலை, ஆட்கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் மற்றும் நிதி மோசடி குற்றங்களில் ஈடுபட்டவர்களே அதிகம். இவ்வாறு நித்தியானந்த ராய் கூறினார்.இந்தியா கோரிக்கை விடுத்தும், மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் பயங்கரவாதி டேவிட் ஹெட்லி இன்னும் நாடு கடத்தப்படவில்லை. மற்றொரு குற்றவாளி தவாஹிர் ராணாவை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. மேலும், இவர்களை தவிர்த்து பிரபல தாதாக்களான கோல் பிராரின் கூட்டாளியான சதிந்தர்ஜித் சிங் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் அன்மோல் ஆகியோர் அமெரிக்காவில் இருப்பவர்களில் முக்கியமான கிரிமினல்கள் ஆவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
டிச 11, 2024 19:16

தான் திருடன், மற்றவர்கள் எல்லோரும் திருடன் என்று சொல்வது போல் உள்ளதே!


Sampath Kumar
டிச 11, 2024 09:08

இதில் பேரும் பாலும் பிஜேபி அடிவருடிகள் தான் அதிகமுண்டு என்று அமைச்சர் அறிவாரா ?? அப்பாவைகள் எங்கும் செல்விதான் பாவிகள் பதில் சொல்லுங்க


அப்பாவி
டிச 11, 2024 07:32

இங்கே லஞ்சம் குடுத்து அமெரிக்காவில் முதலீடு வாங்குனவங்க மேலே ஆக்‌ஷன் உண்டா அமைச்சரே?


அப்பாவி
டிச 11, 2024 07:30

அமெரிக்காவின் சட்டம் தெதியாமல் உளறுகுறார்கள். அமெரிக்க பிரஜை ஆகும் முன்னர் விரிவான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். பொய் சொல்லி அமெரிக்க பிரஜையாக ஆனாலும், ஆதாரத்துடன் தெரிவித்தால் அவர்களது குடியுரிமையை ரத்து செய்து சொந்த நாட்டிற்கு அனுப்பி விடும். அதே மாதிரிதான் அமெரிக்க இந்திய பிரஜைகள் OCI கார்டு வாங்குவதற்கு 1008 கேள்விகளுக்கு பதிலளித்து பெற வேண்டும். இங்கிருந்து போனவணை கோட்டை உட்டுட்டு அங்கே போய் தஞ்சமடைஞ்சுட்டாங்கன்னு ஒப்பாரி வெக்காம முறையாக அவர்களின் அமெரிக்க க்டியுரிமைதை ரத்து செய்து இங்கே கொண்டாங்க. பார்லிமெண்ட்டில் அழுதா உலகம் சிரிக்கும். அது சரி... சுவுஸ் பேங்க்கில் கணக்கு வெச்சிருந்தவங்களையே லிஸ்ட் வாங்கி தனியா மிரட்டுனவங்கதானே...


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 09:57

American Deep State க்கு அமெரிக்க அதிகாரத்தில் இருக்கும் செல்வாக்கு காரணம் ..... குடியுரிமை இந்திய தேசவிரோதிகளுக்கு எளிதில் கிடைத்துவிடும் .... குடியுரிமை வாங்க பன்னூன் உட்கார்ந்து பரிட்சை எழுதுற போட்டோ பாருங்க என்று உன்னைப்போன்றவர்கள் உருட்டினாலும் வியப்பதற்கில்லை ... அமெரிக்காவுக்கு தன்னுடைய சொல்பெச்சு கேட்கும் அரசுதான் எங்கும் வேண்டும் .... சீனா, வடகொரியா விதிவிலக்கு ..... அமெரிக்கா காட்டிய பாதையில் போகாத ராஜீவை போட வி புலிகளை - புலிகளின் சொந்தப்பகைக்கு நடுவில் - அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது .....


ஆரூர் ரங்
டிச 11, 2024 11:41

குற்றம் செய்து விட்டு அடைக்கலம் கேட்பவர்கள் பல நாடுகளின் காமதேனு. அவர்களை ஒளித்து வைத்து DIPLOMATIC பேரம் பேசி GEOPOLITICAL லாபம் தேடுவது அவர்களுக்கு கைவந்த கலை. இப்போது பல நாடுகளுக்கும் வருமானமீட்டும் புது வகை வழிப்பறிக் கலை.


ராமகிருஷ்ணன்
டிச 11, 2024 05:23

பழைய தமிழ் திரைப்படங்களில் எல்லா வில்லன்களும் சிங்கப்பூர் போவார்கள். இப்ப நிஜத்தில் அமெரிக்காவா.


J.V. Iyer
டிச 11, 2024 05:08

எல்லாம் ஜனவரி 20 வரையில். பிறகு திரும்ப விரட்டப்படுவார்கள் என்று நம்பலாம். எல்லா குற்றவாளிகளுக்கும் புகலிடம் பிரிட்டன், மற்றும் ஐரோப்பாதான்.


Priyan Vadanad
டிச 10, 2024 22:46

நல்லுறவுகளை வளர்க்க முயற்சி எடுக்கவேண்டும். இருக்கிற உறவை கெடுக்க முயற்சி செய்யக்கூடாது.


Rpalni
டிச 11, 2024 06:34

சென்னையில் 90 சதவிகிதம் கால்வாய் வேலை முடிந்தது என்று சொல்லி 4000 கோடியை ஏப்பம் விட்டு விட்டு கருப்பு பணத்தை அமெரிகாவில் பதுக்கி விட்டு வந்தவர்களுக்கும் தண்டனை உண்டா


Priyan Vadanad
டிச 10, 2024 22:44

பூமாலை கெடச்சுட்டுது. நன்னா பிய்ச்சி எறிங்கோ


புதிய வீடியோ