உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகை தமன்னா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகை தமன்னா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புதுச்சேரியில் நடந்த பல கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக நடிகை தமன்னா அறிக்கை வெளியிட்டுள்ளார். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் ரூ.2 கோடியே 40 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த மாஜி அரசு ஊழியர் அசோகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=febkgzty&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமா நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலின் விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம் ஆயிரக்கணக்கானோரிடம் பணத்தை திரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நிதிஷ் ஜெயின்,36, அரவிந்த் குமார்,40, ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இதனிடையே, கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. துவக்க விழா மற்றும் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதால், இருவரும் பங்குதாரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நடிகை தமன்னா தன் மீதான புகாருக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், 'கிரிப்டோ கரன்சி முறைகேட்டில் தனக்கு தொடர்பிருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை அறிந்தேன். இதுபோன்ற வதந்தியான, பொய்யான செய்திகள் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று மீடியாவில் உள்ள எனது நண்பர்களுக்கு வேண்டுகோளை விடுக்கிறேன். அதேசமயம், இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எனது குழுவினர் எடுத்து வருகின்றனர்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ganesh
மார் 01, 2025 18:24

நடிகைகளுக்கு தான் அறிவு இல்லைனா அந்த விளம்பரம் பார்த்த மக்களுக்கு எங்க அறிவு போச்சு? ஆயிரம் சாக்கடைய கடந்து தான் போகணும் நம்ம ஜாக்ரதையா


subramanian
மார் 01, 2025 14:35

தமன்னா ஒரு சிரிப்பு.....எல்லாம் மாறிவிடும். அடப்போங்கய்யா...


ஜான் குணசேகரன்
மார் 01, 2025 14:31

செய்தி மிகவும் பரபரப்பாக இருந்தது. தாங்க முடியாமல் உள்ளது. திடீர்.... அதிர்ச்சி... அதிரடி.... பரபர.... பதிலடி.... பின்னணி தகவல்... இரத்தத்தை உறைய வைக்கும்.... நெஞ்சம் பத பதைக்கும் .... இப்படி எல்லாம் இருந்தது.


Sundar
மார் 01, 2025 13:52

சினிமா நடிகை என்றாலே பரபரப்பு செய்திதான்... அப்பத்தான் மக்கள் உடனே படிப்பாங்க...


babusrinivasan
மார் 01, 2025 13:32

இந்த மாதிரி மோசடிக்கு துணை போகும் நடிகைகளை இந்த வழக்கில் உட்படுத்த வேன்டும், காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் கீழ் தரமான நடிகைகள்


karthik
மார் 01, 2025 12:12

இதுல என்ன பரபரப்பு இருக்கு?


Senthoora
மார் 01, 2025 18:01

இப்போ இப்படி நியூஸ் போட்டால்தான் பத்திரிகைகள் வியாபாரம் அகுதாம்.


SUBRAMANIAN P
மார் 01, 2025 11:55

கேவலம் பணத்துக்காக என்ன, எதுன்னு விஷயம் தெரிஞ்சிக்காம கண்ட விளம்பரங்களில் மூஞ்சைக்காட்டவேண்டியது அப்புறம் விளக்குமாறு விளக்கம் என்ற பெயரில் மழுப்பவேண்டியது.. கொஞ்சமாது திருந்துங்கடா சினிமா மோகத்துலருந்து வெளில வாங்க..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை