உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேல்சபை தலைவரின் கையில் சி.டி.ரவி - அமைச்சர் விவகாரம்

மேல்சபை தலைவரின் கையில் சி.டி.ரவி - அமைச்சர் விவகாரம்

பெங்களூரு: ''சி.டி.ரவி - அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் விவகாரம் தொடர்பாக, சம்பவ இடத்தை பார்வையிடுவது பற்றி சி.ஐ.டி.,யினர் முடிவு செய்வர். இதற்கு அனுமதி அளிப்பதும், அளிக்காததும் மேல்சபை தலைவரின் விருப்பம்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.ஆங்கில புத்தாண்டையொட்டி, பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வீட்டிற்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகன், நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா உட்பட மூத்த அதிகாரிகள் சென்றனர். டி.ஜி.பி., கேக் வெட்டி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட விருந்தில் உணவு சாப்பிட்டனர். அதை தொடர்ந்து, அவர்களுடன் அமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.பின், அவர் அளித்த பேட்டி:பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவி வழக்கு தொடர்பாக, சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். சம்பவ இடத்தை பார்வையிடுவது பற்றி, அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதற்கு அனுமதி அளிப்பதும், அளிக்காததும் மேல்சபை தலைவரின் விருப்பம்.துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மீது ரவி புகார் அளித்தது தொடர்பாக, போலீஸ் டி.ஜி.பி.,யே பதில் அளிப்பார். என்னிடம் புகார் தெரிவித்திருந்தால், நான் பதில் அளித்திருப்பேன்.முதல்வர், உள்துறை அமைச்சரின் உத்தரவுப்படி, போலீசார் செயல்படுவர். யாரோ ஒருவர் கொடுக்கும் உத்தரவை, அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்.ஒப்பந்ததாரர் சச்சின் தற்கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சர் பிரியங்க் கார்கே கூறி உள்ளார். விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆங்கில புத்தாண்டை, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வீட்டில் உயர் போலீஸ் அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி