உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 16 மாநிலங்களில் சைபர் மோசடி: ரூ.10 ஆயிரம் கோடி சுருட்டிய இருவர் கைது

16 மாநிலங்களில் சைபர் மோசடி: ரூ.10 ஆயிரம் கோடி சுருட்டிய இருவர் கைது

ஜெய்ப்பூர்: சைபர் குற்றத்தில் ஈடுபட்டு 16 மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த டாக்டர் உள்ளிட்ட இருவரை, ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.ராஜஸ்தானை சேர்ந்த சுனில் குமார் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் ' டெலிகிராம்' செயலியில், தெரியாத எண்ணில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டார். அந்த எண்ணில் எனது நண்பர் படம் இருந்ததால், அவருடன் 'சாட்டிங்'கில் ஈடுபட்டேன். அப்போது, ஆடம்பர வாழ்க்கை வாழலாம். தினமும் 3 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றார். இதனை நம்பி பல தவணைகளில் அவரது சொன்ன வங்கிக்கணக்குகளுக்கு ரூ.94,70,300 அனுப்பினேன். ஆனால், அவர் ஏமாற்றி விட்டார் எனக்கூறி இருந்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சுனில்குமார் அனுப்பிய வங்கிக்கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர். அந்தக் கணக்குகள், ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுதிர் யாதவ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த பல் டாக்டர் ஆனந்த் சோனி என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு சுனில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. எஞ்சிய பணம் எங்கு உள்ளது, அவர்களுடன் வேறு யார் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபடுவதற்காக போலியாக ஒரு நிறுவனத்தை இருவரும் துவக்கி உள்ளனர். சுதிர் யாதவ் பெயரில் வங்கிக்கணக்கு துவக்கி 16 மாநிலங்களில் 51 சைபர் குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர். மஹாராஷ்டிரா(9), தெலுங்கானா(7), ஆந்திரா(6), கர்நாடகா(5), தமிழகம்(4), ராஜஸ்தான், கேரளாவில் தலா 3, உ.பி., காஷ்மீர், டில்லி, குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தலா 2, ஹரியானா, பஞ்சாப், ஒடிசா மற்றும் சத்தீஸ்கரில் தலா ஒரு சைபர் குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டு உள்ளனர். அந்த வகையில் இக்கும்பல் ரூ.10,01,80,865 அளவுக்கு மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக எஸ்.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது: குற்றவாளியின் மொபைல் எண்ணை ஆய்வு செய்ததில் அதன் மீது 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. வங்கிக்கணக்குகள் ஆய்வு செய்ததில் அதில் ரூ.10 ஆயிரம் கோடி அளவு மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இதனால், இந்த தொகை இன்னும் அதிகரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Krishnamurthy Venkatesan
பிப் 28, 2025 16:17

பத்துகோடியா பத்தாயிரம் கோடியா? இவர்கள் வங்கி கணக்கு ஆரம்பிக்க உறுதுணையாக இருந்த வங்கியின் ஊழியர்களையும் பிடித்து விசாரணை செய்யுங்கள்.


Subburamu Krishnasamy
பிப் 28, 2025 13:06

Greed for quick money is the reason for such criminals. On line looters are d by such greedy peoples


ராமகிருஷ்ணன்
பிப் 28, 2025 12:45

இவர்களுடன் திமுகவினருக்கு தொடர்பு இருக்கும். சரியான விசாரணை நடத்த வேண்டும்.


Azar Mufeen
பிப் 28, 2025 13:03

இதில் பாஜக, தி மு க கூட்டு களவாணி கைவரிசை இருக்கும்


நிக்கோல்தாம்சன்
பிப் 28, 2025 20:54

ராமகிருட்டிணன், அப்சர் உங்க இருவரின் பெயரிலும் சத்தமில்லாமல் ஒரு குடும்பம் கடன்வாங்கி வைத்திருக்கிறது, நாளை உங்களது சந்ததியினர் அந்த கடனை கட்டப்போகிறார்கள், யார் என்று சொல்லுங்க பாப்போம் ?


Sudha
பிப் 28, 2025 12:40

இதுதானா வங்கிகள். TRAI, RBI CBI, அனைத்து துறைகளின் இலட்சணம்? பொது மக்களிடம் KYC, ஆதார், பான் கேட்பதெல்லாம் எல்லோருக்கும் இல்லையா?


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 28, 2025 12:28

மோசடியில் ஈடுபடுவதற்காக போலியாக ஒரு நிறுவனத்தை இருவரும் துவக்கி உள்ளனர். எப்படி அனுமதி கிடைச்சுது ??


சமீபத்திய செய்தி