உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சைபர் குற்ற மோசடி : பீஹாரில் 6 பேர் கைது

சைபர் குற்ற மோசடி : பீஹாரில் 6 பேர் கைது

பாட்னா: மாநிலங்களுக்கு இடையேயான சைபர் குற்ற மோசடியை, பீஹார் போலீசார் முறியடித்து, குற்றம் தொடர்பாக 6 பேர் கைது செய்தனர்.மாநிலங்களுக்கிடையே பல்வேறு சைபர் குற்றங்களை செய்து ஏமாற்றி வரும் மோசடி கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், சைபர் குற்றத்தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர்களை பிடித்து விசாரித்ததில் சைபர் குற்றம் மோசடிகளை அரங்கேற்றிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.இது குறித்து எஸ்பி ஸ்வர்ன் பிரபாத் கூறியதாவது:கைது செய்யப்பட்டவர்கள், போலி கடன் சலுகைகள், மோசடி மின்சார பில் புதுப்பிப்புகள், வேலை வாய்ப்புகள் மற்றும் டிஜிட்டல் கைது உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்கள் மூலம் பலரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.மேலும் இந்த கும்பல் வெவ்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டது. அவர்களின் கணக்குகளில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்துள்ளோம். கைதான கும்பலுடன் தொடர்புள்ள மற்றவர்களை பிடிப்பதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.இவ்வாறு ஸ்வர்ன் பிரபாத் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை