உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் கரையை கடந்தது மோந்தா புயல்

ஆந்திராவில் கரையை கடந்தது மோந்தா புயல்

காக்கிநாடா: வங்கக்கடலில் உருவான 'மோந்தா' புயல், ஆந்திராவின் காக்கிநாடா அருகே பலத்த சூறைக்காற்றுடன் நேற்று கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் ஆந்திராவில் 38 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமாகின.தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 26ம் தேதி இரவு மோந்தா புயலாக வலுவடைந்தது. இது தீவிர புயலாக வலுவடைந்த நிலையில், வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கும் லிங்கப்பட்டினத்துக்கும் இடையே மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் காக்கிநாடா அருகே கரையை கடக்க துவங்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2o0o3iin&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன்பின், மோந்தா புயலானது வலுவிழந்த நிலையில் ஆறு மணி நேரத்தை கடந்தபின் கரையை கடந்தது. அப்போது, கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. அதிகபட்சமாக நெல்லுார் மாவட்டத்தின் 12.6 செ.மீ., இப்புயல் காரணமாக, ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காக்கிநாடா, மசிலிப்பட்டினம், குண்டூர், காவாளியில் கனமழை பெய்தது.மோந்தா புயல் காரணமாக ஆந்திர கடலோரப் பகுதிகளில், ராயலசீமா, தெலுங்கானாவின் கடலோரப் பகுதிகளில், சத்தீஸ்கரின் தெற்கு மாவட்டங்கள், ஒடிஷாவில் அதி தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் வீசிய சூறைக்காற்றுக்கு ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலையோரங்களில் மின் கம்பங்கள் விழுந்தன.இதேபோல் ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி, கோனசீமா உட்பட ஏழு மாவட்டங்களில் நேற்றிரவு 8.30 முதல் இன்று காலை 6:00 மணி வரை வாகனப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. ஆந்திராவில் புயலால் பாதிக்கப்படும் என வானிலை மையம் கணித்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

9 விமானங்கள் ரத்து

சென்னை- ஆந்திரா இடையே 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர இருந்த 6 விமானங்களும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்ல இருந்த 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் 75 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. வானிலை சீரானதும் நிலைமையை ஆராய்து பின்னர் ரயில் சேவை தொடக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல், இண்டிகோ, ஏர் இந்தியா விமான நிறுவனங்களும் விசாகப்பட்டினத்தில் இன்று விமான சேவையை நிறுத்தி உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

பாதிப்புகள் என்ன?

மோந்தா புயல் கரையை கடந்த போது பெய்த கனமழை காரணமாக ஆந்திராவில் ஒருவர் உயிரிழந்தார். கனமழையால் ஒடிசாவிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. புயலின் தாக்கத்தால் ஆந்திராவில் 38 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமாகின. மேலும், 1.38 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்களும் நாசமாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramesh Sargam
அக் 28, 2025 23:34

திமுக எனும் புயலைவிட ஊழலைவிட வேறெந்த புயலாலும் அவ்வளவு அச்சுறுத்தல் இருக்காது.


Devanand Louis
அக் 28, 2025 13:28

சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பது, மழைநீர் வடிகால் அமைப்புப் பணிகளுக்காக செலவிட்ட 4000 கோடி ரூபாய் பணத்தை சென்னை மாநகராட்சி மற்றும் தொடர்புடைய அமைச்சர்கள் முறைகேடாக உண்டுவிட்டார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இது தி.மு.க. - திராவிட மாடல் அரசாங்கத்தின் ஊழல் பணிகளை திமுக files மீளாய்வு செய்யச் சரியான நேரமாகும்.


திகழ்ஓவியன்
அக் 28, 2025 14:06

சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பது, மழை பெய்தால் தண்ணீர் தேங்க தான் சேயும் இது இயற்கை , அனால் சில மணி நேரங்களில் வடிந்து விடுகிறது , உங்கள் டபுள் என்ஜின் சர்க்கார் மாநிலங்கள் விட TN பூரண சுகம்


SRIRAM
அக் 28, 2025 12:59

வெயில் அடித்தால் வறட்சி நிவாரண நிதி மழை வந்தால் வெள்ள நிவாரண நிதி.... எது வந்தாலும் இவர்களுக்கு லாபம் தான்... நமக்கு தான் முட்டு சந்து.....


Vasan
அக் 28, 2025 12:17

முன்பு அதிமுக அம்மா ஆட்சியில், மக்கள், நீருக்காக, நீர் லாரியின் பின் குடத்துடன் ஓட வேண்டிய சூழ்நிலை இருந்தது. அனால், இப்பொழுது திமுக அப்பா ஆட்சியில், வீட்டிற்குள்ளேயே நீர் வருகிறது. வேறென்ன வேண்டும் எங்களுக்கு? போடுங்கம்மா வோட்டு, உதய சூரியனை பார்த்து.


திகழ்ஓவியன்
அக் 28, 2025 12:39

நன்றி DMKவுக்கு வோட்டு கேட்டதிற்கு, கடவுளுக்கு கூட தெரியுது தமிழ்நாட்டை தாக்க கூடாது என்று காக்கிநாடா சென்று விட்டது


ஆரூர் ரங்
அக் 28, 2025 12:52

புயலால் ஓங்கோல் கூட பாதிக்கப்படலாம்.


angbu ganesh
அக் 28, 2025 18:03

திகழ் ஓவியன் ரொம்ப முட்டு கொடுக்கிறார் 200 ரூவா நல்லா வேலை செய்யுது போல


venkat
அக் 28, 2025 18:11

Super comment..


theruvasagan
அக் 28, 2025 22:23

ஆமாம். ஆமாம். புயல் இங்க உள்ளவரக்கூடாதுன்னு தீர்மானம் நிறைவேற்றி இருப்பாங்க. அதுக்கு பயந்து கொண்டுதான் ஆந்திரா பக்கம் ஓடிபோச்சு. காசாவில் நடக்கும் போரில் இஸ்ரேலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றின உடனே இஸ்ரேல் அரண்டுபோய் உடனடியாக சண்டையை நிறுத்தினதே. அந்த மாதிரிதான். மாடல் ஆட்சின்னா சும்மாவா.


RAMESH KUMAR R V
அக் 28, 2025 11:33

அடிக்கடி நிகழ்கின்ற இயற்கை பேரிடர். அரசாங்கமும் மக்களும் முன்னெச்சரிக்கையுடன் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோமாக.


Ramesh Sargam
அக் 28, 2025 09:27

மக்கள் எல்லா பாதுகாப்பையும் அரசே செய்துகொடுக்கும் என்று எண்ணி அலட்சியமாக வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம். உங்களால் முடிந்த அளவுக்கு பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க முயலுங்கள். குறிப்பாக தமிழக மக்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.


raja
அக் 28, 2025 08:55

ஆந்திர மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை